திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
Amaran: ``எனக்கு பெரிய படங்கள் பண்ணனும்னு ஆசை..." - சிவகார்த்திகேயன்
'அமரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்திகேயனின் நேர்காணல் ஒன்றைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
அதில் பேசிய சிவகார்த்திகேயன், " 'அமரன்' படம் நல்ல வரவேற்பைப்பெற்று விட்டது. அடுத்து என்ன பண்ணப்போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். அமரன் படம் 250, 300 கோடி ரூபாய் பணம் வசூல் செய்யும் என்பதற்காக பண்ணவில்லை. படத்தின் கதை நன்றாக இருந்ததால்தான் அமரன் படத்தில் நடித்தேன். நல்ல தயாரிப்பு நிறுவனம், இயக்குநர், படக்குழு, கதை என எல்லாம் சரியாக இருந்தால் அதை நம்பி மட்டுமே படத்தில் நடிப்பேன்.
அது தவிர, வசூலை கருத்தில் எடுத்துக் கொள்ளமாட்டேன். குறிப்பாக இனிமேல் நல்ல தயாரிப்பு நிறுவனங்களுடன் படம் பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன். இதற்கு முன்பு நான் நடித்த படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் எனக்கும் சில மோசமான அனுபவங்கள் இருக்கிறது. இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைய தயாரிப்பு நிறுவனமும் ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது.
இனிமேலும் 300 கோடி, 400 கோடி ரூபாயை தாண்ட வேண்டும் என்பதற்காக பண்ண மாட்டேன். ஆனால் எனக்கு பெரிய படங்கள் பண்ண வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. என்னுடைய சம்பளம் கூட இவ்வளவு கொடுத்தால்தான் நடிப்பேன் என்று இல்லை. அமரன் படத்தின் சம்பளம் வேறு. முருகதாஸ் சார் படத்தின் சம்பளம் வேறு.
இதனைத்தொடர்ந்து நடிக்கக்கூடிய படங்களின் சம்பளமும் வேறு. படத்தின் பட்ஜெட்டை பொறுத்துதான் எல்லாம். தயாரிப்பாளர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்கக்கூடாது. ஆனால் பெரிய படம் பண்ண வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...