செய்திகள் :

மகாராஷ்டிர முதல்வர் அரியணைக்கான போட்டி ஆரம்பம்!

post image

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே, அடுத்த முதல்வருக்கான சண்டை கூட்டணிக் கட்சிக்குள் தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவ. 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த தேர்தலில் மகாயுதி கூட்டணியில் பாஜக, தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார்) மற்றும் சிவசேனை(ஷிண்டே) கட்சிகளும், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) மற்றும் சிவசேனை(உத்தவ் தாக்கரே) கட்சிகள் போட்டியிட்டன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பெரும்பான்மையான ஆய்வுகள் மகாயுதி கூட்டணியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், வாக்குகள் எண்ணிகை தொடங்குவதற்கு முன்னதாகவே, இரு கூட்டணியில் உள்ள தலைவர்களும் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் இடத்தில் தங்களின் கட்சி இருப்பதாகவும், தங்களின் தலைவர்தான் அடுத்த முதல்வர் என்றும் ஆளாளுக்கு பேட்டி அளித்து வருவதால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், புணே பிரதான சாலையில், முதல்வர் அஜித் பவார் என்று பேனரை வைத்து பரபரப்பை ஏற்படுத்திய பிறகு அகற்றியுள்ளார்.

காங்கிரஸ்

வாக்குப்பதிவு முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோல், மகா விகாஸ் அகாதி கூட்டணி காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய நிலவரப்படி, சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெறும் சூழல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சிவசேனை(உத்தவ் அணி)

நானா படோலின் கருத்தை தொடர்ந்து, செய்தியாளர்களுடன் பேசிய சிவசேனை எம்பி சஞ்சய் ரெளத், மகா விகாஸ் அகாடி பெரும்பான்மை பெற்ற பிறகு, அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ஆலோசித்துதான் முடிவெடுப்போன் என்றார்.

மேலும், முதல்வர் வேட்பாளர் நானா படோல் என்று அவரிடம் காங்கிரஸ் தலைமை கூறியிருந்தால், அதனை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தியும் அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.

சிவசேனை(ஷிண்டே அணி)

மகாயுதி கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனை(ஷிண்டே) கட்சியின் எம்எல்ஏவும் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ஷிர்சாத், சட்டப்பேரவைத் தேர்தல் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை முன்னிறுத்திதான் போட்டியிடப்பட்டது என்றார்.

ஷிண்டேவை தேர்ந்தெடுப்பதற்காக வாக்காளர்கள் அதிகளவில் வாக்குகளை செலுத்தியுள்ளனர், அடுத்த முதல்வராவது ஷிண்டேவின் உரிமை, அவர்தான் அடுத்த முதல்வர் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தார்.

பாஜக

அடுத்த முதல்வர் குறித்த கேள்விக்கு, மகாயுதியின் மூன்று கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து நல்ல முடிவை எடுப்போன் என்று பாஜகவின் தலைவரும் துணை முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் 66.05 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், நாளை நவ. 23 காலை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

அதிகரிக்கும் மாயை வேலைவாய்ப்புகள்! எதற்காக இந்த மாயை வேலைவாய்ப்புகள்?

தற்போதெல்லாம் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக போலி வேலைவாய்ப்புகளை அறிவிக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் நல்ல வேலை கிடப்பது என்பது குதிரைக்கொம்புபோல் ஆகிவிட்டது என்று வேலை ... மேலும் பார்க்க

பெண்களுக்கு மாதம் ரூ.1,000, இலவச மின்சாரம்! கேஜரிவால் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், அடுத்தாண்டு நடைபெறும் தில்லி பேரவைத் தேர்தலுக்கான முக்கிய வாக்குறுதிகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.தில்ல... மேலும் பார்க்க

உ.பி. இடைத்தேர்தலில் 9 தொகுதிகளையும் பாஜக இழக்கும்: அகிலேஷ் யாதவ்

உ.பி.யில் இடைத்தேர்தல் நடந்த 9 தொகுதிகளையும் பாஜக இழக்கும் என்று சமாஜவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஜெய்ப்பூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தேர்தலுக்கு பி... மேலும் பார்க்க

டிஜிட்டல் கைது மோசடி: 17,000 வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

டிஜிட்டல் கைது மோசடி: 17,000 வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்நாடு முழுவதும் டிஜிட்டல் கைது எனும் பெயரில் நடந்த மோசடிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 17 ஆயிரம் வாட்ஸ்ஆப் கணக்குகளை மத்திய உள்விவகாரத் துறை அமைச்சக... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், ஜார்கண்டில் ஆட்சி அமைப்போம்: கார்கே நம்பிக்கை

மகாராஷ்டிரம், ஜார்கண்டில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வரும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று பெங்களூருவில் செய்தியாகளுக்கு ... மேலும் பார்க்க

பஸ்தரில் மீண்டும் அமைதி திரும்பியுள்ளது: சத்தீஸ்கர் முதல்வர்

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 நக்சல்கள் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தனர். கொரஜ்குடா, தாண்டேஸ்புரம், நகரம் மற்றும... மேலும் பார்க்க