இந்தியாவில் ஒரே ரயில்; 75 ஆண்டுகளாக இலவச பயணம்; எங்கே... ஏன் தெரியுமா?!
இறந்ததாக அறிவித்த 3 மருத்துவர்கள்; தகனம் செய்யும்போது உயிர்த்தெழுந்த இளைஞர் - என்ன நடந்தது?
ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டத்தில் வசித்தவர் ரோஹிதாஷ் குமார் (25). வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியான இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. உடனே அவரின் உறவினர்கள், அவரை ஜுன்ஜுனு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அப்போது பணியில் இருந்த டாக்டர் யோகேஷ் ஜாகர், டாக்டர் நவ்நீத் மீல், பிஎம்ஓ டாக்டர் சந்தீப் பச்சார் ஆகியோர் ரோஹிதாஷ் குமார் இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து அவருக்கான இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது.
இறுதியில் தகனம் செய்வதற்கு கொண்டு சென்று அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும்போது, அவர் உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டிருக்கின்றன. உடனே ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையில் புகாரும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், உயிரோடு இருந்த ஒருவரை இறந்துவிட்டதாக முறையாக பரிசோதிக்காமல் கூறிய மருத்துவர்கள் மூன்று பேரையும் மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...