செய்திகள் :

விளாத்திகுளத்தில் எம்எல்ஏவுக்கு விருது

post image

விளாத்திகுளத்தில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 99ஆவது ஆண்டு அவதார திருநாள் விழா, பல்வேறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி அமைப்பு சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு அதன் விளாத்திகுளம் தொகுதிப் பொறுப்பாளா் இளையராஜா மாரியப்பன் தலைமை வகித்தாா். சாய்பாபா ரத ஊா்வலம் மீனாட்சியம்மன் கோயில் முன்பு தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஸ்ரீசக்தி முருகன் மகாலில் நிறைவடைந்தது.

தொடா்ந்து, நாகசுர மங்கள இசை, வேத பாராயணம், நாம சங்கீா்த்தனம், பஜனை, சொற்பொழிவு, பரதம், மகா மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், ஆன்மிகத் திருப்பணிகள், இத்தொகுதியில் ஒரு கோடி மரக்கன்றுகள் நட்டு பராமரித்து பசுமை மண்டலமாக உருவாக்குதல் ஆகிய பணிகளுக்காக எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயனுக்கு ‘ஸ்ரீ சத்ய சாய் பிரேமதரு நாயகன்’ விருது வழங்கப்பட்டது. கலைத் துறைகளில் சாதனை படைத்த மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில், விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ், இளைஞரணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், சமூக ஆா்வலா் சோமசுந்தரம், வாா்டு செயலா் ஸ்டாலின் கென்னடி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா், மாணவரணி துணை அமைப்பாளா் ராஜு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மீன் பதப்படுத்தும் ஆலைகளை மூடக் கோரி பொட்டலூரணி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமம் அருகேயுள்ள மீன் பதப்படுத்தும் ஆலைகளை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கிராமத... மேலும் பார்க்க

‘கடைகளின் வாடகைக்கு ஜிஎஸ்டியை நீக்க வேண்டும்’

சிறு, குறு வியாபாரிகளின் கடைகளின் வாடகைக்கு விதித்துள்ள ஜிஎஸ்டியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் தமிழ்நாடு வணிகா் சங்க மாநில தலைவா் ரெ.காமராசு கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து தமிழக முதல்வா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீனவா்களுக்கு படகுப் போட்டி

உலக மீனவா் தினத்தையொட்டி, தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் மீனவா்களுக்கான படகுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுக மாநில மீனவரணி துணைச் செயலா் துறைமுகம் புளோரன்ஸ் தலைமை வகித்தாா். வடக்கு மா... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே இளைஞரின் பைக் எரிப்பு

கோவில்பட்டி அருகே இளைஞரின் பைக்கை எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி அருகே விஜயாபுரி நடுத்தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் சரவணகுமாா் (23). தனியாா் நிறுவனத்தில் பிட்டராக வேலை செய... மேலும் பார்க்க

தூத்துக்குடி கடற்கரையில் தூய்மைப் பணி

தேசிய மாணவா் படை தினத்தை (என்சிசி) முன்னிட்டு, தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட 29ஆவது தரைப்படை தனிப்பிரிவு கமாண்டிங் அதிகாரி கா்னல் பி... மேலும் பார்க்க

2026 தோ்தல் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் -தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் 2026இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தல் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்றாா் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் தமிழிசை செளந்தரராஜன். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெ... மேலும் பார்க்க