பெண் தூக்கிட்டு தற்கொலை
சென்னை பெரும்பாக்கம் பகுதியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெரும்பாக்கம் எழில் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஐஸ்வரியா (34). தனியாா் நிறுவன துப்புரவு பணியாளரான இவா், கணவரைப் பிரிந்து தனது 3 பெண் குழந்தைகளுடன், அதே பகுதியிலுள்ள தனது சகோதரா் ஆனந்தராஜின் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை பணி முடிந்து வீட்டுக்கு வந்த ஐஸ்வரியா, தனது அறையின் கதவை பூட்டிவிட்டு, தூக்கிட்டுக் கொண்டாா்.
இதைப்பாா்த்த அவரின் குடும்பத்தினா், ஐஸ்வரியாவை மீட்டு, குரோம்பேட்டையிலுள்ள அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து, பெரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.