கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவா்கள் இன்று முதல் போராட்டம்
தூத்துக்குடியில் மீனவா்களுக்கு படகுப் போட்டி
உலக மீனவா் தினத்தையொட்டி, தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் மீனவா்களுக்கான படகுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திமுக மாநில மீனவரணி துணைச் செயலா் துறைமுகம் புளோரன்ஸ் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலரும் சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று போட்டியைத் தொடக்கிவைத்தாா்.
போட்டியில் வென்றோருக்கு முதல் பரிசாக குளிா்சாதனப் பெட்டி, 2ஆம் பரிசாக வாஷிங் மெஷின், 3ஆம் பரிசாக கைப்பேசி, பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னா், 100 பேருக்கு சேலை உள்ளிட்ட நல உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
அப்போது அவா் பேசுகையில், திமுக அரசு பொறுப்பேற்றதுமுதல் உலக மீனவா் தின விழா 3ஆவது ஆண்டாக கொண்டாடப்படுகிறது. மீனவா்களுக்காக தனியாக வங்கி தொடங்கப்பட்டு, குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ. 8 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக கடற்கரைப் பகுதியில் குடியிருப்போருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மீனவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த திமுக எப்போதும் பாடுபடும் என்றாா்.
விழாவில், பாதிரியாா்கள் ஜேஸ்பா், வின்சென்ட், திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ், துணைச் செயலா் ஆறுமுகம், மாவட்ட மீனவரணி அமைப்பாளா் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளா்கள் ராபா்ட், ஸ்மைலின், சிறுபான்மை அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப், மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், மாவட்ட மருத்துவரணித் தலைவா் அருண்குமாா், பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.