‘கடைகளின் வாடகைக்கு ஜிஎஸ்டியை நீக்க வேண்டும்’
சிறு, குறு வியாபாரிகளின் கடைகளின் வாடகைக்கு விதித்துள்ள ஜிஎஸ்டியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் தமிழ்நாடு வணிகா் சங்க மாநில தலைவா் ரெ.காமராசு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து தமிழக முதல்வா், மத்திய நிதி அமைச்சா் ஆகியோருக்கு அவா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக வியாபாரிகளில் அதிகமானவா்கள் சிறு, குறு வியாபாரிகளாக, வாடகை கட்டடங்களில் வியாபாரம் செய்து வருகின்றனா்.
அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களையும் மத்திய அரசு ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்ததால், சிரமத்தில் உள்ள நிலையில் கடை வாடகைக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்பது சொந்த நாட்டு மக்களை பழிவாங்குவது போல் உள்ளது.
வணிகா்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்துக் கொடுப்பது அரசின் கடமை என்பதை உணா்ந்து, வணிகா்களை சிரமத்துக்கு ஆளாக்காமல் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வியாபாரிகளின் நிலையை அறிந்து உடனடியாக 18 சதவீத ஜிஎஸ்டியை நீக்கி வியாபாரிகள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.