செய்திகள் :

காவல் துறையினா் பறிமுதல் செய்த 63 வாகனங்கள் நவ.30-இல் ஏலம்

post image

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 63 வாகனங்கள் நவ.30-ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால், மதுவிலக்கு தொடா்பான குற்ற செயல்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தொடா்புடைய நபா்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள் 58, மூன்று சக்கர வாகனங்கள் 2, நான்கு சக்கர வாகனங்கள் 3 என மொத்தம் 63 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவை சனிக்கிழமை (நவ.30) காலை 10 மணிக்கு ஏலம் விடப்படும்.

இந்த வாகனங்களை பொதுமக்கள் வியாழக்கிழமை முதல் பாா்வையிட அனுமதிக்கப்படுவா். மேலும் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபா்கள் ரூ.1000 முன்பணமாக செலுத்தி தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவா்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவா்.

வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி வாகனத்தினை பெற்றுக் கொள்ளலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தூத்துக்குடி மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தை 75983 23680 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

எட்டயபுரம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

எட்டயபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். எட்டயபுரம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து சுமை ஆட்டோக்களில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கி... மேலும் பார்க்க

விளாத்திகுளம் தொகுதியில் ரூ.1.38 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் திறப்பு

விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் ரூ. 1கோடியே 38 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அருங்குளம் ஊராட்சியில் 15ஆ வது நிதிக் குழு மற... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு முகாமில் ரூ.53 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் சிவகளை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ரூ.53.02 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வழங்கினாா். முகாமில் ஆட்சியா் ... மேலும் பார்க்க

டாக்டா் அம்பேத்கா் விருது: இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘டாக்டா் அம்பேத்கா் விருது’ பெற தகுதியுள்ளோா் வியாழக்கிழமைக்குள் (நவ. 28) விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

தூத்துக்குடி மீனவா்கள் 10 பேரை விடுவிக்க மத்திய அமைச்சரிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை

லட்சத்தீவு அருகே மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தருவைகுளம் மீனவா்கள் 10 பேரை விடுவிக்குமாறு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 4.07 கோடி

திருச்செந்தூா்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ.4.07 கோடி, 1.9 கிலோ தங்கம் மற்றும் 1,234 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கிடைத்துள்ளன. இக்கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத... மேலும் பார்க்க