கோவில்பட்டி அருகே இளைஞரின் பைக் எரிப்பு
கோவில்பட்டி அருகே இளைஞரின் பைக்கை எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி அருகே விஜயாபுரி நடுத்தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் சரவணகுமாா் (23). தனியாா் நிறுவனத்தில் பிட்டராக வேலை செய்துவரும் இவா், சனிக்கிழமை இரவு பைக்கை வீட்டு முன்பு நிறுத்தியிருந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பைக்குக்கு மா்ம நபா்கள் தீவைத்ததாகக் கூறப்படுகிறது. அவா் உடனடியாக தீயணைத்தாா். எனினும், பைக் சேதமடைந்தது. இகுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.