பொது மருத்துவா்கள் நியமனத்துக்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல்
தில்லியில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு 232 பொது மருத்துவா்களை நியமனம் செய்ய துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்திருப்பதாக ராஜ்நிவாஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மத்திய பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட மருத்துவா்கள் குரூப் ஏ அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனா்.
232 பொது மருத்துவா்கள் நியமனத்துக்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா். இவா்கள் லோக் நாயக், ராஜா ஹரிஷ் சந்திரா, லால் பகதூா் சாஸ்திரி, தீன் தயாள் உபாத்யாய அரசு மருத்துவமனைகள் மற்றும் தலைமை மாவட்ட மருத்துவ அதிகாரிகள் அலுவலகங்களில் பணியமா்த்தப்படுவா். இதன் மூலம் சுகாதார அமைப்பில் நீண்டகாலமாக நிலவி வரும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.