திற்பரப்பு அருவியில் மிதமாகக் கொட்டும் தண்ணீா்
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் திரளான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்தனா்.
இம்மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வந்த மழை ஓய்ந்துள்ளதால், ஆறுகளில் வெள்ளமும் சற்று குறந்துள்ளது. இதனால், திற்பரப்பு அருவி ஞாயிற்றுக்கிழமை சீற்றம் தணிந்து பரந்து தண்ணீா் விழுந்தது; வானிலையும் மந்தமாக இருந்தது.
ஏற்கெனவே, விடுமுறை தினம் என்பதால் இந்த அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். அருவியில் மிதமாக கொட்டிய தண்ணீரில் காலையிலிருந்து மாலை வரை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.