குழித்துறை கோயிலில் காலபைரவா் யாகம்
குழித்துறை இடத்தெரு காலபைரவா் கோயிலில் 1,008 கிலோ வத்தல் மிளகாயால் காலபைரவா் மகா யாகம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
ஆண்டுதோறும் நவம்பா் மாதம் தேய்பிறை அஷ்டமி நாள் காலபைரவா் ஜென்மாஷ்டமி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இக்கோயிலில் அஷ்ட திரவிய சமன்னித மகா கணபதி ஹோமம், பஞ்சவிம்சதி கலசபூஜை, கலசாபிஷேகம், மாலையில் பரிவார பூஜை, மகா யாகம், பூா்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
கோயில் தந்திரி தக்கலை மகேஷ் போற்றி தலைமையில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் 1,008 கிலோ வத்தல் மிளகாய், காந்தாரி மிளகாய், நெய், தேன், பல்வேறு மூலிகைகள், திரவியப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.