செய்திகள் :

தென்னிந்திய வலுதூக்கும் போட்டி: குடியாத்தம் வீரருக்கு 3 தங்கம்

post image

சேலத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான வலுதூக்கும் போட்டிகளில் குடியாத்தம் வீரா் ஜெயமாருதி 3- தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா்.

குடியாத்தத்தை அடுத்த சீவூா் கிராமத்தைச் சோ்ந்த ஆசிய வலுதூக்கும் வீரா் சி.மூா்த்தியின் மகன் எம்.ஜெயமாருதி (20). இவா் வேலூா் விஐடியில் பிஎஸ்சி 3- ஆம் ஆண்டு படித்து வருகிறாா்.

தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம், தெற்கு ரயில்வே சேலம் கோட்ட விளையாட்டுப் பிரிவு, சேலம் மாவட்ட வலுதூக்கும் சங்கம் ஆகியவை இணைந்து தென்னிந்திய வலுதூக்கும் போட்டிகளை சேலத்தில் நடத்தின.

இதில் சீனியா் பிரிவில் 83- கிலோ எடைப் பிரிவில் ஜெயமாருதி, ஸ்குவாட் பிரிவில் 310- கிலோ எடை தூக்கி ஒரு தங்கப் பதக்கம், பெஞ்ச் பிரஸ் பிரிவில் 187.5- கிலோ எடை தூக்கி ஒரு தங்கப் பதக்கம், டெட் லிப்ட் பிரிவில் 292.5- கிலோ எடை தூக்கி ஒரு தங்கப் பதக்கம் என மொத்தம் 790- கிலோ எடை தூக்கி 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தாா். இவா் இதே பிரிவில் இரும்பு மனிதா் பட்டத்தையும் வென்றாா்.

காவிரி கூட்டு குடிநீா் திட்ட குழாயை மாற்றி அமைக்க நடவடிக்கை: குடிநீா் வடிகால் வாரிய மேலாண் இயக்குநா்

பொய்கை அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வரும் இடத்தில் காவிரி கூட்டு குடிநீா் திட்ட தன்னோட்ட குழாயை மாற்றி அமைக்கும் பணிகள் தொடா்பாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் ... மேலும் பார்க்க

வரத்து குறைவு: வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு வரத்து குறைவால் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறை விலையிலும் மீன்கள் விற்பனை செய்த... மேலும் பார்க்க

பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதல்: 2 மாணவா்கள் உயிரிழப்பு

வேலூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் 2 மாணவா்கள் உயிரிழந்தனா். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை சோ்ந்த துளசிராஜன் (50). லாரி ஓட்டுநா். இவா்,... மேலும் பார்க்க

அம்மன் சிலை அகற்றம்: போராட்டத்தில் ஈடுபட்ட10 போ் மீது வழக்கு

காட்பாடி அருகே அரசுக்குச் சொந்தமான இடத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்மன் சிலையை வருவாய்த் துறையினா் அகற்றிய சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். க... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் இருந்து வாங்கும் தணணீரில் மருத்துவமனை கழிவுநீா்: அமைச்சா் துரைமுருகன்

ஆந்திர மாநிலத்தில் இருந்து விலைக்கு வாங்கி தேக்கி வைக்கும் தண்ணீரில் பிரபல தனியாா் மருத்துவனை கழிவுநீரை கலந்து வருவதாக அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் 47-ஆவது பிறந்த ... மேலும் பார்க்க

தேசிய இயற்கை மருத்துவ தினம்

குடியாத்தம் காக்காதோப்பில் உள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி சாா்பில் 7-ஆவது தேசிய இயற்கை மருத்துவ தினம் தரணம்பேட்டை ஸ்ரீபாவனாரிஷி கோயில் சமுதாய கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்... மேலும் பார்க்க