கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவா்கள் இன்று முதல் போராட்டம்
வரத்து குறைவு: வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு
வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு வரத்து குறைவால் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.
வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறை விலையிலும் மீன்கள் விற்பனை செய்து வருகின்றனா். உள்ளூா் நீா்நிலைகளில் இருந்தும், நாகப்பட்டினம், கடலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலம் கொச்சி, கோழிக்கோடு, கா்நாடக மாநிலம் மங்களூரு, காா்வாா் பகுதிகளில் இருந்தும், கோவாவில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் 50 முதல் 70 டன்னும், மற்ற நாள்களில் 50 டன்னும் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை 7 முதல் 10 லாரிகள் வரை மீன் வரத்து இருக்கும். அதன்படி, கடந்த வாரம் 10 லாரி வரை மீன் வரத்து இருந்தது. ஆனால், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 8 லாரி அளவுக்கு மட்டுமே மீன்கள் வந்திருந்தன. வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்ந்து காணப்பட்டது.
அதன்படி, வஞ்சிரம் கிலோ ரூ.1,400, சின்ன வஞ்சிரம் ரூ.800-க்கும், ஷீலா ரூ.300 முதல் ரூ.500, தேங்காய் பாறை ரூ.300, சங்கரா ரூ.250 முதல் ரூ.400, இறால் கிலோ ரூ.350 முதல் ரூ.450, நண்டு கிலோரூ.300 முதல் ரூ.400, வரையும், கடல் வவ்வா ரூ.450 முதல் ரூ.700, நெத்திலி ரூ.200 முதல் ரூ.400, முரல் ரூ.350, மத்திய ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டன.