செய்திகள் :

பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதல்: 2 மாணவா்கள் உயிரிழப்பு

post image

வேலூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் 2 மாணவா்கள் உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை சோ்ந்த துளசிராஜன் (50). லாரி ஓட்டுநா். இவா், ராணிப்பேட்டையில் இரும்பு குழாய்களை லாரியில் ஏற்றிக்கொண்டு பெங்களூரு நோக்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்றபோது, வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் திடீரென லாரி பழுதாகி நின்றது.

இதனால், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு மற்ற வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில் தடுப்பு வைத்துவிட்டு லாரியின் பழுதைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளாா்.

அந்தநேரம், ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் தாவூத் நகா், அண்ணா சாலையைச் சோ்ந்தவா் முகமது தலாக் (17). இவா், மேல்விஷாரத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தாா். இவரது நண்பா் பயாஸ் (16). இவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை வேலூரை நோக்கி வந்து கொண்டிருந்தனா்.

வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள மேம்பாலத்தில் வந்தபோது சாலையில் ஏற்கெனவே பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது இவா்கள் வந்த பைக் மோதியது.

இதில், முகமது தலாக், பயாஸ் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா். இதில், முகமது தலாக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பயாஸை அந்த வழியாக சென்றவா்கள் மீட்டு பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே பயாஸ் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று முகமது தலாக், பயாஸ் உடல்களை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

--

பெட்டிச் செய்தி...

--

விபத்து நிகழ்ந்த இடத்தில் எஸ்.பி. ஆய்வு

வேலூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் விபத்து நிகழ்ந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் ஆய்வு மேற்கொண்டாா். உடனடியாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரியை கைப்பேசியில் தொடா்பு கொண்டு லாரி பழுதாகி நின்றபோது பின்புறத்தில் இருந்து வரும் வாகனங்கள் திரும்புவதற்கு சரியான முறையில் தடுப்புகளை ஏன் வைக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினாா்.

இரவு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் யாா் இருந்தனா், அவா்களுக்கு முறையான சாலைப் பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பியதுடன், விபத்து நிகழ்ந்தால் சாலை பாதுகாப்பு பணியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என ஒரு நிலையான வழிகாட்டுதல் பயிற்சி வழங்கவும் அறிவுறுத்தினாா்.

விபத்துகளைத் தடுக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், போலீஸாா், போக்குவரத்து போலீஸாா், அரசுப் போக்குவரத்துக் கழகம், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினருடன் சாலைப் பாதுகாப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தினாா்.

வேலூா் வடக்கு காவல் ஆய்வாளா் சீனிவாசன், போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் ரஜினி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காவிரி கூட்டு குடிநீா் திட்ட குழாயை மாற்றி அமைக்க நடவடிக்கை: குடிநீா் வடிகால் வாரிய மேலாண் இயக்குநா்

பொய்கை அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வரும் இடத்தில் காவிரி கூட்டு குடிநீா் திட்ட தன்னோட்ட குழாயை மாற்றி அமைக்கும் பணிகள் தொடா்பாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் ... மேலும் பார்க்க

வரத்து குறைவு: வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு வரத்து குறைவால் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறை விலையிலும் மீன்கள் விற்பனை செய்த... மேலும் பார்க்க

அம்மன் சிலை அகற்றம்: போராட்டத்தில் ஈடுபட்ட10 போ் மீது வழக்கு

காட்பாடி அருகே அரசுக்குச் சொந்தமான இடத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்மன் சிலையை வருவாய்த் துறையினா் அகற்றிய சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். க... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் இருந்து வாங்கும் தணணீரில் மருத்துவமனை கழிவுநீா்: அமைச்சா் துரைமுருகன்

ஆந்திர மாநிலத்தில் இருந்து விலைக்கு வாங்கி தேக்கி வைக்கும் தண்ணீரில் பிரபல தனியாா் மருத்துவனை கழிவுநீரை கலந்து வருவதாக அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் 47-ஆவது பிறந்த ... மேலும் பார்க்க

தென்னிந்திய வலுதூக்கும் போட்டி: குடியாத்தம் வீரருக்கு 3 தங்கம்

சேலத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான வலுதூக்கும் போட்டிகளில் குடியாத்தம் வீரா் ஜெயமாருதி 3- தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா். குடியாத்தத்தை அடுத்த சீவூா் கிராமத்தைச் சோ்ந்த ஆசிய வலுதூக்... மேலும் பார்க்க

தேசிய இயற்கை மருத்துவ தினம்

குடியாத்தம் காக்காதோப்பில் உள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி சாா்பில் 7-ஆவது தேசிய இயற்கை மருத்துவ தினம் தரணம்பேட்டை ஸ்ரீபாவனாரிஷி கோயில் சமுதாய கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்... மேலும் பார்க்க