சதம் விளாசிய சஞ்சு சாம்சன்; தென்னாப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!
ஆசிரியர் பக்கம்: Marvels of Mahindra Thar Roxx ஒர்க்ஷாப்! நெகிழ்ச்சியில் மாணவர்கள்!
பண்டிகைக் காலப் பரவசம் காற்றை நிறைக்கும் காலம் இது. முன்பெல்லாம் தீபாவளி என்றால் புது சினிமாக்கள் ரிலீஸாகும். இப்போதெல்லாம் புதுப்புதுக் கார்கள் ரிலீசாகின்றன. உதாரணத்துக்கு கியா கார்னிவெல்லை எடுத்துக் கொண்டால்... தாராளமான 7 சீட்கள் கொண்ட சொகுசுக் கார் இது. ஒரு சிறிய இடைவெளியில் ரூபாய் 64 லட்சத்துக்கு இது இப்போது அறிமுகமாகியிருக்கிறது. ஏற்கெனவே இருந்த கார்னிவெல்லைவிட இது சுமார் 20 லட்ச ரூபாய் அதிகம். இருந்தாலும் தாங்கள் விரும்பும் கார் என்பதால், இதுவரை சுமார் 3,000 பேர் இதை 2 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்துவிட்டார்கள். இதைத்தான் மார்க்கெட் சென்டிமென்ட் என்று கூறுகிறார்கள். ஆனால், இன்னொருபுறம் `கார் பைக் மார்க்கெட்டில் உற்சாகம் இல்லை' என்று செய்திகள் வலம் வருகின்றன. ஆனால் இந்தச் செய்திகளை மீறி கார்னிவெல் எப்படி அதன் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திருக்கிறது? நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட்டும், பஜாஜ் பல்ஸர் N125ம் கூட இப்போது அறிமுகமாகியிருக்கிறது. இந்த கார் பைக்குகளின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்ஸ் இந்த இதழில் இடம்பெற்றிருக்கின்றன.
மஹிந்திராவும் மோட்டார் விகடனும் இணைந்து மஹிந்திரா ரிசர்ச்வேளியில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி ஏற்பாடு செய்திருந்த `Marvels of Mahindra Thar Roxx’ என்று தலைப்பிடப்பட்ட Walkaround Workshop மாணவர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது. தார் ராக்ஸ் உருவெடுத்த பரிசோதனைக் கூடத்தை நேரில் பார்த்த மாணவர்கள் ஃபேஸ்புக், லிங்க்டு-இன், இன்ஸ்டாகிராம் என்று அனைத்திலும் தார் ராக்ஸ் பற்றி விவாதித்தார்கள். புகைப்படங்களைப் பகிர்ந்தார்கள்.
இந்தப் பயிலரங்கத்தில் கலந்து கொள்ள நிகில் காங்ச்சாரி என்ற மாணவர் ஹூப்ளியில் இருந்து வந்திருந்தார். பயிலரங்கத்தில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய நிகில் ஒரு சில நாட்களில் நம்மை ஆச்சரியப்படுத்தினார். அவர் முன்பதிவு செய்திருந்த தார் ராக்ஸ் தனக்கு டெலிவரி ஆகிவிட்டது என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருந்த அவர், தாரை டெலிவரி எடுத்த புகைப்படத்தையும் நம்மோடு வாட்ஸ்அப்பிலும் பகிர்ந்திருந்தார்.
பயிலரங்கத்தில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு இந்த முறை போனஸாக பேட்டரி லேப் மற்றும் பெஞ்ச்மார்க்கிங் லேப் ஆகியவற்றுக்கு விசிட் செய்து, அங்கே இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைத்தது.
இந்தப் பண்டிகைக் காலத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் பொங்கட்டும்.
- ஆசிரியர்