செய்திகள் :

`அவள் விருதுகள்' விழாவில் அறிமுகமான Vikatan Play; ஆடியோ வடிவில் வெளியான `நீரதிகாரம்'

post image
தமிழகத்தின் சாதனைப் பெண்களைக் கொண்டாடும், 2024-க்கான `அவள் விருதுகள்' விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விகடனின் புதிய முயற்சியான `Vikatan Play' (விகடன் ப்ளே) சேவை இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
Vikatan Play

பாரதி பாஸ்கர் இன்றைய நிகழ்ச்சியில் `விகடன் ப்ளே'-க்கான லோகோவை வெளியிட்டனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாடிய விகடனின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன், `விகடன் ப்ளே'-வின் முதல் எக்ஸ்க்ளூசிவ் ஒரிஜினல் ஆடியோவாக `நீரதிகாரம்' தொடரை வெளியிட்டார்.

Vikatan Play

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கோடு சேர்த்து அணைக் கட்டுமானத்தில் பங்கெடுத்த ஆயிரக்கணக்கான அதிகாரிகள் மற்றும் மக்களின் உழைப்பையும் வரலாற்றையும் விரிவாகப் பதிவு செய்தது, ஆனந்த விகடனில் 122 வாரங்கள் தொடராக வந்த `நீரதிகாரம்' நாவல். நாவலாகவும், புத்தகமாகவும் விகடன் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற `நீரதிகாரம்' இன்று முதல் ஆடியோ வடிவிலும் வெளியாகியிருக்கிறது.

எப்படி கேட்பது?

1. நீரதிகாரத்தின் முதல் 5 ஆடியோ எபிசோடுகள் இன்று வெளியாகியுள்ளன. இனி வாரந்தோறும் வியாழன் அன்று 5 புதிய எபிசோடுகள் வெளியாகும்.

2. விகடனின் Android மற்றும் iOS செயலிகளை இன்ஸ்டால் செய்து இந்த ஆடியோக்களைக் கேட்கலாம். App-ன் VIP பக்கம் மற்றும் Vikatan Play menu icon ஆகிய இரண்டிலும் புதிய நீரதிகாரம் தொடர் அப்டேட் ஆகியிருக்கும். ஒருவேளை பழைய App வெர்ஷனாக இருந்தால் லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்யவும். (Android: 5.6.6.1 | iOS: 7.7)

Vikatan Play

3. நீரதிகாரம் ஆடியோ புத்தகத்தின் நேரடி லிங்க்: https://www.vikatan.com/audio-book/194523 (விகடன் App-ல் மட்டுமே இது Open ஆகும். எனவே App-ஐ இன்ஸ்டால் செய்துவிட்டு Click செய்யவும்.

மொபைலில் இந்த வசதியை பெற க்ளிக் செய்க.. https://vikatanmobile.page.link/web-play

4. நீரதிகாரம் ஆடியோ புத்தகம் மட்டுமல்ல; இனி வாரந்தோறும் வெளியாகவிருக்கும் எக்ஸ்க்ளூசிவ் `விகடன் ப்ளே' ஆடியோக்களையும் நீங்கள் இலவசமாகவே கேட்கலாம். இன்னும் பல புதிய ஆடியோக்கள் உங்களுக்காக அணிவகுத்து நிற்கின்றன. எனவே வியாழன்தோறும் ஆச்சர்யங்களுக்குத் தயாராக இருங்கள்.

5. விகடன் ப்ளே தொடர்பான கருத்துகள் மற்றும் சந்தேகங்களுக்கு வாசகர்கள் webmaster@vikatan.com என்ற மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளலாம்.

``தயவுசெய்து இறந்துவிடு, இந்த பூமிக்கு நீ பாரம்..'' - மாணவருக்கு அதிர்ச்சி தந்த கூகுள் AI ஜெமினி

அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாகாணத்தைச் சேர்ந்த 29 வயது பட்டதாரி மாணவர் விதய் ரெட்டி. இவர் கூகுளின் செயற்கை நுண்ணறிவான (AI) ஜெமினியிடத்தில் (Gemini) சாதாரணமாக, முதியோர் பராமரிப்பு குறித்துக் கே... மேலும் பார்க்க

Vikatan Play: நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... உங்கள் விகடன் App-ல்!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/ParthibanKanav... மேலும் பார்க்க

BSNL: இனி மொபைலில் சிம் கார்டே இல்லாமல் பேசலாம்... முதல் கட்ட சோதனையில் பிஎஸ்என்எல் வெற்றி..!

சிம் கார்டே இல்லாமல் போன் பேசும் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய சாட்டிலைட் நிறுவனமான வியாசட் (Viasat) உடன் இணைந்து, BSNL நிறுவனம் தனது டைரக்ட் டு டிவைஸ... மேலும் பார்க்க