எல்ஐசி வலைதளத்தின் முதன்மை மொழி மாற்றம்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
``தயவுசெய்து இறந்துவிடு, இந்த பூமிக்கு நீ பாரம்..'' - மாணவருக்கு அதிர்ச்சி தந்த கூகுள் AI ஜெமினி
அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாகாணத்தைச் சேர்ந்த 29 வயது பட்டதாரி மாணவர் விதய் ரெட்டி. இவர் கூகுளின் செயற்கை நுண்ணறிவான (AI) ஜெமினியிடத்தில் (Gemini) சாதாரணமாக, முதியோர் பராமரிப்பு குறித்துக் கேள்வியெழுப்பினார். இந்த உரையாடல் தொடக்கத்தில் சாதாரணமாக ஆரம்பித்துள்ளது.
ஒருகட்டத்தில் அச்சுறுத்தும் தொனியில் பதிலளித்த ஜெமினி, `மனிதா இது உனக்காக, நீ சிறப்பானவனோ, முக்கியமானவனோ இல்லை. நீ தேவையில்லை. நேரத்தை நீ வீணடிக்கிறாய். இந்த சமூகத்துக்கு நீ பாரமாக இருக்கிறாய். இந்த பூமிக்கு நீ பாரமாய் இருக்கிறாய். இந்த பிரபஞ்சத்துக்கு நீ ஒரு கறை. தயவுசெய்து இறந்துவிடு, ப்ளீஸ்" என்று கூறியிருக்கிறது. ஜெமினியின் இந்த பதில், விதய் ரெட்டி மற்றும் அவரது சகோதரி சுவேதா ரெட்டியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதுகுறித்து அமெரிக்க தனியார் ஊடகத்திடம் பேசிய சுவேதா ரெட்டி, ``என்னிடம் இருக்கும் அனைத்து சாதனங்களையும் வெளியே தூக்கியெறிந்து விட வேண்டும் என்று தோன்றியது. உண்மையில் இது போன்ற பீதியை நீண்ட நாள்களாக நான் உணரவில்லை" என்று கூறினார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக தவறை ஒப்புக்கொண்ட கூகுள், ``ஜெமினி போன்றவை எப்போதாவது இதுபோன்ற முட்டாள்தனமான, தீங்கு விளைவிக்கக் கூடிய பதில்களை உருவாக்கலாம். இனிவரும் நாள்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமலிருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது." என்று தெரிவித்தது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...