திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
செல்போனில் நண்பர்களாக அறிமுகம்; ஊட்டியில் 10-ம் வகுப்பு மாணவியை 7 பேர் பாலியல் வதை செய்த கொடூரம்!
வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியர், பிழைப்புக்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் குடியேறியுள்ளனர். இருவரும் கூலி வேலை செய்து மகளை படிக்க வைத்து வருகின்றனர். இந்த தம்பதியின் 16 வயது மகள் தற்போது 10 -ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 10 - ம் தேதி திடீரென மாயமாகியிருக்கிறார். பதறிய பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மாணவியை தேடி வந்து நிலையில், மூன்று நாள்கள் கழித்து கடந்த 13 - ம் தேதி வீடு திரும்பியிருக்கிறார்.
முகநூல் மூலம் அறிமுகமான நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோரிடம் கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மாணவியிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 7 பேர் மீதும் போக்சோ பிரிவில் வழக்கு பதிவுசெய்து 4 பேரை கைதுசெய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.
இந்த கொடூரம் குறித்து தெரிவித்த மகளிர் காவல்துறையினர், "சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை மேற்கொண்டோம். மேலும் சிறுமியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த காஜா, ஊட்டியைச் சேர்ந்த ஹரிஷ், இடுஹட்டி பகுதியைச் சேர்ந்த பிரவீன் (19),
பெந்தட்டி பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (24), அஜீத் உட்பட 7 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டறிந்தோம். 7 பேர் மீதும் வழக்கு பதிவுசெய்து 4 பேரைக் கைதுசெய்தோம். தலைமறைவான 3 பேரைத் தேடி வருகிறோம். இவர்கள் அனைவரும் சிறுமியிடம் செல்போனில் நண்பர்களாக பழகி தகாத செயல்களில் ஈடுபட்டு பாலியல் வன்கொடுமைக்கு சிறுமியை உட்படுத்தியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் " என்றனர்.