செய்திகள் :

தேனி: குடிநீர் வடிகால் வாரியத்தில் ரூ.1.18 கோடி மோசடி; கையாடல் பணத்தில் புது வீடு; நடந்தது என்ன?

post image

திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம் (56). இவர் தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கழிவுநீர் பராமரிப்புப் பிரிவு அலுவலக கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் மீது மோசடி புகார் எழுந்ததைத் தொடர்ந்து, துறை சார்ந்த உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

முருகானந்தம்

அதில் சென்னையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு 42.29 லட்ச ரூபாய்க்கான அலுவலக வங்கி காசோலை அனுப்பியுள்ளார். அலுவலக வங்கிக் கணக்கிலிருந்து அவரின் சொந்த வங்கிக் கணக்கிற்குப் பல்வேறு தேதிகளில் 75.77 லட்ச ரூபாயை மாற்றியுள்ளார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து நிர்வாகப் பொறியாளர் கருத்தப்பாண்டியன் அளித்த புகாரில் முருகானந்தம் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே கண்காணிப்பாளர் முருகானந்தம், தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து போலீஸார் முருகானந்தத்தை 4 நாள்கள் காவலில் எடுத்த விசாரித்ததில் மோசடி நடைபெற்றது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், திண்டுக்கல் ஐ.டி.ஐ.யில் படித்த முருகானந்தம், கோவையில் உள்ள லட்சுமி மில், திருச்சி பெல் நிறுவனத்தில் பயிற்சி முடித்துள்ளார். பின் தேனி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அங்கன்வாடி அமைப்பாளராகப் பணிபுரியும் சித்ராவைத் திருமணம் முடித்தார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 2019-ல் பெரியார் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் தட்டச்சராகப் பணியில் சேர்ந்து பதவி உயர்வில் கண்காணிப்பாளராக இருந்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மோசடி புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மோசடி செய்ததை ஒப்புக்கொண்டு அந்த பணத்தை ஒரே நாளில் வடிகால் வாரியத்திற்குத் திருப்பி செலுத்தியுள்ளார்.

மோசடி

அதன்பின் பணியில் சேர்ந்த இவருக்குக் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதைப் பயன்படுத்தி நிதி ஆவணங்களில் முறைகேடு செய்து பல கட்டங்களாக 1.18 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார். மோசடி செய்த பணத்தின் மூலம் ஆண்டிபட்டி அருகே புதிய வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். சுற்றுலாவும் சென்றிருக்கிறார்" என்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

போதைப்பொருள் விற்பனை; நடிகர் மன்சூர் அலிகான் மகன் அதிரடி கைது! - நடந்தது என்ன?

90-களின் தமிழ்த் திரைப்பட வில்லன்கள் பட்டியலில் மிக முக்கிய இடம் மன்சூர் அலிகானுக்கு உண்டு. தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தவர், தற்போது குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திர... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம்: `போலீஸ் கொலைவெறித் தாக்குதல்' - இளைஞரின் சிறுநீரகம் செயலிழந்ததாக புகார்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் வழங்கப்பட்ட மனுவில், “கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சேரன் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் தௌபீக் உமர் (21... மேலும் பார்க்க

மலேசியா டு திருச்சி; விமானத்தில் கடத்திவரப்பட்ட அபூர்வ வகை ரக்கூன், பல்லிகள்; தொடரும் கடத்தல்கள்!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்க... மேலும் பார்க்க

Harshad Mehta: பல்லாயிரம் கோடி ஊழல், சரிந்த சாம்ராஜ்யம்; கதறிய கடைசி நொடிகள்; ஹர்ஷத் மேத்தாவின் கதை

‘பிக் புல்’ என்றழைக்கப்பட்ட ஹர்ஷத் மேத்தா பற்றிய கட்டுரைகள், கதைகள், வழக்கு விசாரணைகள் திரைப்படங்களாகவும், வெப்சீரியஸாகவும் எடுக்கப்பட்டு வருகின்றன. எத்தனை முறை கேட்டாலும் ஹர்ஷத் மேத்தாவின் கதை கண்களை... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் ஏற்பட்ட தகராறு... பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர்..!

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகிலுள்ள கூட்டாம்புளியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், அதே பகுதியில் இரும்புக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வெள்ளக்கண்ணு. கொத்தனாரான இவருக்கும் அதே பகுதியைச் சே... மேலும் பார்க்க

ரூ.2 கோடிக்கு அரிய வகை மண்ணுளி பாம்பு விற்க முயற்சி; கடத்தல் கும்பல் சிக்கியது எப்படி?

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அரிய வகை மண்ணுளிப் பாம்புகள் வசிக்கின்றன. ’இரட்டை தலைப் பாம்பு’ என அழைக்கப்படும் சிவப்பு நிற மண்ணுளிப் பாம்புகளுக்கு சர்வதேச சந்தைகளில் அதிக மவுசு இருக்கிறதாக கூறப்படுக... மேலும் பார்க்க