செய்திகள் :

மாற்றுச் சமூக இளைஞரை விரும்பிய தங்கை; காதலனை நேரில் வரவழைத்து படுகொலை செய்த அண்ணன்!

post image

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர் சிம்சன் என்ற புஷ்பராஜ். இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது தங்கை சரோஜினி. பொறியியல் பட்டதாரியான இவர், நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. விஜயகுமார் பாப்பிரெட்டிபட்டியில் உள்ள சிமெண்ட் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர்களின் நட்பு காதலாக மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

கொலை செய்யப்பட்ட விஜயகுமார்

இருவரின் காதல் விவகாரம் சரோஜினியின் வீட்டிற்கு தெரியவரவே அவரை வேலைக்கு அனுப்பவில்லை.  சரோஜினியிடம் விஜயகுமாருடனான காதலை கைவிடுமாறு அவரின் பெற்றோரும், சகோதரரும் வலியுறுத்தியும் அவர் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரோஜினி வீட்டை விட்டு வெளியேறி விஜயகுமாரின் வீட்டில் தஞ்சம் அடைந்தார்.  இதனையடுத்து சரோஜினியின்  பெற்றோர் பாளையங்கோடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் தன் மகளை காணவில்லை என புகார் அளித்தனர். போலீஸார் இரண்டு வீட்டாரையும் அழைத்து சுமுக தீர்வு காண வேண்டும் எனக் கூறி சரோஜினியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து விஜயகுமாருடனான காதலை கைவிடுமாறு வற்புறுத்தியதால்  கடந்த சில நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.  இதனால் வேதனையடைந்த சரோஜினியின் அண்ணன் சிம்சன், விஜயகுமாரை தொடர்பு கொண்டு பேசி காதல் விவகாரம் குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறி நேரில் வருமாறு அழைத்துள்ளார். இதனால் விஜயகுமார் நண்பர் ஒருவருடன் நெல்லைக்கு வந்தார். அவரை அழைத்து வர சிம்சனும்   அவரது நண்பரான சிவா என்பவரையும்  பைக்கில் அழைத்துக் கொண்டு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் சென்றனர்.  

கொலைச் சம்பவம் நடந்த சரோஜினியின் வீட்டு மாடி

விஜயகுமார் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் அதனால் ரயில் நிலையத்திலேயே காத்திருங்கள் எனக்கூறி விஜயகுமாரின் நண்பரை அங்கேயே காத்திருக்குமாறு கூறியுள்ளனர். விஜயகுமார் மட்டும் அவர்களுடன் பைக்கில் சென்றுள்ளார். தனது  வீட்டிற்கு அழைத்துச் சென்று மாடியில் வைத்து காதல் விவகாரம் தொடர்பாக பேசியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் உடன்பாடு ஏற்படாததால் விஜயகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் விஜயகுமார் உயிரிழந்தார். திருமண ஆசையில் காதலியை பார்க்க வந்தவரை காதலியின் அண்ணன் கொலைசெய்த சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் விற்பனை; நடிகர் மன்சூர் அலிகான் மகன் அதிரடி கைது! - நடந்தது என்ன?

90-களின் தமிழ்த் திரைப்பட வில்லன்கள் பட்டியலில் மிக முக்கிய இடம் மன்சூர் அலிகானுக்கு உண்டு. தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தவர், தற்போது குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திர... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம்: `போலீஸ் கொலைவெறித் தாக்குதல்' - இளைஞரின் சிறுநீரகம் செயலிழந்ததாக புகார்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் வழங்கப்பட்ட மனுவில், “கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சேரன் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் தௌபீக் உமர் (21... மேலும் பார்க்க

மலேசியா டு திருச்சி; விமானத்தில் கடத்திவரப்பட்ட அபூர்வ வகை ரக்கூன், பல்லிகள்; தொடரும் கடத்தல்கள்!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்க... மேலும் பார்க்க

Harshad Mehta: பல்லாயிரம் கோடி ஊழல், சரிந்த சாம்ராஜ்யம்; கதறிய கடைசி நொடிகள்; ஹர்ஷத் மேத்தாவின் கதை

‘பிக் புல்’ என்றழைக்கப்பட்ட ஹர்ஷத் மேத்தா பற்றிய கட்டுரைகள், கதைகள், வழக்கு விசாரணைகள் திரைப்படங்களாகவும், வெப்சீரியஸாகவும் எடுக்கப்பட்டு வருகின்றன. எத்தனை முறை கேட்டாலும் ஹர்ஷத் மேத்தாவின் கதை கண்களை... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் ஏற்பட்ட தகராறு... பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர்..!

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகிலுள்ள கூட்டாம்புளியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், அதே பகுதியில் இரும்புக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வெள்ளக்கண்ணு. கொத்தனாரான இவருக்கும் அதே பகுதியைச் சே... மேலும் பார்க்க

ரூ.2 கோடிக்கு அரிய வகை மண்ணுளி பாம்பு விற்க முயற்சி; கடத்தல் கும்பல் சிக்கியது எப்படி?

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அரிய வகை மண்ணுளிப் பாம்புகள் வசிக்கின்றன. ’இரட்டை தலைப் பாம்பு’ என அழைக்கப்படும் சிவப்பு நிற மண்ணுளிப் பாம்புகளுக்கு சர்வதேச சந்தைகளில் அதிக மவுசு இருக்கிறதாக கூறப்படுக... மேலும் பார்க்க