செய்திகள் :

சதம் விளாசிய சஞ்சு சாம்சன்; தென்னாப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!

post image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடியான சதத்தால் இந்திய அணி ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று (நவம்பர் 8) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.

சதம் விளாசிய சஞ்சு சாம்சன்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். அபிஷேக் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

இதையும் படிக்க: ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்தியா தயாரா? இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?

சஞ்சு சாம்சன் அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட்டார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 21 ரன்களில் ஆட்டமிழக்க, திலக் வர்மா களம் கண்டார். திலக் வர்மா அவரது பங்குக்கு அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

அதிரடியில் மிரட்டிய சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 50 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் சாம்சன் ஆட்டமிழந்தார். அதன் பின், களமிறங்கிய ஹார்திக் பாண்டியா 2 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ரிங்கு சிங் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிக்க: ஆஸி.க்கு எதிரான தொடரில் இவர்கள் இருவரும் மிக முக்கியம்: இந்திய முன்னாள் வீரர்

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா தரப்பில் ஜெரால்டு கோட்ஸீ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேசவ் மகாராஜ், பீட்டர், பாட்ரிக் க்ரூகர், மார்கோ யான்சென் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது.

இன்னும் பல வெற்றிகள் காத்திருக்கு... முகமது ரிஸ்வானை பாராட்டிய முன்னாள் கேப்டன்!

முகமது ரிஸ்வானை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி பாராட்டியுள்ளார்.பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் அண்மையில் நியமிக்கப்பட்டார். முகமது ரிஸ்வா... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் செல்ல பிசிசிஐ மறுப்பு!

சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடருக்கு பாகிஸ்தானுக்குச் செல்ல இந்திய கிரிக்கெட் கவுன்சில் மறுப்பு தெரிவித்துள்ளது.2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

முதல் டி20: இந்தியா பேட்டிங்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளைய... மேலும் பார்க்க

ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படுவாரா? முன்னாள் கேப்டன் ஆர்வம்!

இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க எந்த அணி முனைப்பு காட்டும் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டர்... மேலும் பார்க்க

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்தியா தயாரா? இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்தியாவுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் வலுவாக முதலிடத்தில் நீடித்து வந்த இந்திய அணி, ... மேலும் பார்க்க

ஆஸி. பிஎம் லெவன் அணியின் பயிற்சியாளராகும் முன்னாள் கேப்டன்!

இந்தியாவுக்கு எதிராக இரண்டு நாள்கள் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.39 வயதான டிம் பெய்ன் 2020-21 ஆம் ஆண்ட... மேலும் பார்க்க