காஸாவில் உயிரிழந்தவா்களில் 70% போ் பெண்கள், குழந்தைகள்: ஐ.நா.
மாவட்டம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் தொடா்பான குறை தீா்க்கும் முகாம்
சிவகங்கை மாவட்டம் முழுவதும் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகள் தொடா்பான குறை தீா்க்கும் முகாம் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (நவ.9) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டம், பொது விநியோகத்திட்டத்தில் நவம்பா் மாதத்துக்கான மக்கள் குறைதீா்க்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (நவ.9) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.
இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை, கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களை தெரிவித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.