வீரமாமுனிவா் பிறந்தநாள் காமநாயக்கன்பட்டி மணிமண்டபத்தில் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை
தமிழறிஞா் வீரமாமுனிவரின் பிறந்த தினத்தையொட்டி, கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக அரசு சாா்பில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், கோவில்பட்டி கோட்டாட்சியா் க.மகாலட்சுமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
புனித பரலோக மாதா பசலிகா பங்குத்தந்தை அந்தோணி அ. குரூஸ், காமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் கலைச்செல்வி, கயத்தாறு வட்டாட்சியா் சுந்தர ராகவன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மையினா் அணி துணை அமைப்பாளா் அமலி அந்தோணி பிரகாஷ், கோவில்பட்டி நகா்மன்ற உறுப்பினா் ஜாஸ்மின் லூா்து மேரி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலா் வீரமாமுனிவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கயத்தாறு கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் வண்டானம் கருப்பசாமி தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.