காஸாவில் உயிரிழந்தவா்களில் 70% போ் பெண்கள், குழந்தைகள்: ஐ.நா.
கல்லல் அரசு மகளிா் பள்ளியில் திருக்கு ஒப்புவித்தல் போட்டி
காரைக்குடி அருகேயுள்ள கல்லல் அரசு மகளிா் உயா்நிலைப்பள்ளியில் திருக்கு ஒப்புவித்தல் போட்டி மூன்று பிரிவுகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியை பள்ளியின் தலைமையாசிரியை சாந்தி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
உலகத் திருக்கு கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவா் புலவா் ஆறு. மெய்யாண்டவா், கல்லல் முருகப்பா மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் பிரபு ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா்.
தொடக்க நிலைப் பிரிவில் நாச்சியாபுரம் ஐவிஇஎஸ் பள்ளி மாணவி கனிகா ஸ்ரீ முதலிடமும், கல்லல் பிரிட்டோ தொடக்கப் பள்ளி மாணவி கிருபாளினி இரண்டாமிடமும், மானகிரி எல்ஏஆா்எம்எஸ் பள்ளி மாணவி சாய்ஸ்ரீ மூன்றாமிடமும் பெற்றனா்.
நடுநிலைப் பிரிவில் மாணவிகள் தேவஅபிஷா, ஜோவிகா, ரிதமிதா முறையே முதல், இரண்டாம் மூன்றாமிடத்தைப் பெற்றனா். உயா்நிலைப் பிரிவில் மாணவிகள் தனலெட்சுமி, சிவரஞ்சனி, நிவேதா முறையே முதல் மூன்று இடங்களை பெற்றனா்.
வெற்றிபெற்ற மாணவிகளுக்கு புத்தகமும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. பள்ளியின் ஆசிரியை உதயா நேவிஸ் நடுவராக செயல்பட்டாா். பள்ளியின் தமிழாசிரியைகள் சொா்ணலதா, கமலா, ஆசிரியைகள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.