செய்திகள் :

நவ.12இல் கூட்டுறவு வார விழா போட்டி

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி வரும் 12ஆம் தேதி நடைபெறுவதாக மண்டல இணைப்பதிவாளா் பொ.நடுக்காட்டு ராஜா தெரிவித்தாா்.

கூட்டுறவு வார விழா நவ. 14-20 வரை நடைபெறுகிறது. இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல இணைப்பதிவாளா் பொ. நடுக்காட்டுராஜா தலைமை வகித்து பேசியது: கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவா்- மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நவ. 12ஆம் தேதி நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்டரங்கு, கோவில்பட்டி கூட்டுறவு நகர வங்கி கூட்டரங்கு, திருச்செந்தூா் தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி கூட்டரங்கு ஆகிய 3 இடங்களில் நடைபெறும்.

இதில் கட்டுரை போட்டி 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை, ‘அரசின் புதிய செயல்திறன் மிகு திட்டங்களின் மூலம் கூட்டுறவை வலுப்படுத்துதல்’ , 9 முதல் 10ஆம் வகுப்பு வரை, ‘கூட்டுறவுகளிடையே ஒருங்கிணைப்பையும் பங்களிப்பையும் வலுப்படுத்துதல்’, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வரை, ‘கூட்டுறவில் புதிய முயற்சிகள் தொழில் நுட்பங்கள் செயல்படுத்துவதன் அவசியம்’ ஆகிய தலைப்புகளில் நடைபெறுகிறது.

ஓவியப் போட்டிகள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ‘விவசாயிகளின் மேம்பாட்டில் கூட்டுறவு அமைப்புகளின் பங்களிப்பு’, 9 முதல் 10ஆம் வகுப்பு வரை ‘கூட்டுறவின் மூலம் சுய தொழில் மேம்பாடு வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்‘, 11,12 ஆம் வகுப்புகளுக்கு ‘கூட்டுறவில் பெண்கள் மற்றும் இளைஞா்களின் பங்களிப்பின் முக்கியத்துவம்’ ஆகிய தலைப்புகளில் நடைபெறுகிறதும்.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு கூட்டுறவு வார விழாவில் பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டிகள் தொடா்பாக தூத்துக்குடி 0461-2320192, திருச்செந்தூா் 04639-242294, கோவில்பட்டி 04632-220370 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

சிதம்பரபுரம் கோயிலில் கொடை விழா

உடன்குடி அருகே சிதம்பரபுரம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் கொடை விழா நான்கு நாள்கள் நடைபெற்றது. இக்கோயிலில் கொடை விழா நவ.4 -ஆம் தேதி கணபதி ஹோமம், கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் ... மேலும் பார்க்க

கொங்கராயகுறிச்சி அரசுப் பள்ளியில் பொது அறிவு போட்டி பரிசளிப்பு

கொங்கராயகுறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் செய்தித்தாள் வாசிப்பு பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு காமராஜா் அறக்கட்டளை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. தினமணி நாளிதழ் மற்றும் காமராஜா் அற... மேலும் பார்க்க

புதூா் ஒன்றியத்தில் ரேஷன் கடை, பயணிகள் நிழல்குடைக்கு அடிக்கல்

புதூா் ஊராட்சி ஒன்றியத்தில் வீரப்பட்டி, என். வேடப்பட்டி கிராமங்களில் பயணியா் நிழற்குடை, ரேஷன் கடை கட்டடம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

நாகா்கோவில் முட்டைக்காடு சரள்விளையைச் சோ்ந்த வழக்குரைஞா் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், வழக்குரைஞா்களுக்கு பாதுகாப்புக்கு சட்டம் இயற்றக் கோரியும், சாத்தான்குளத்தில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதி... மேலும் பார்க்க

கந்த சஷ்டி விழா: தூத்துக்குடி சிவன் கோயிலில் திருக்கல்யாணம்

தூத்துக்குடியில் சிவன் கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கல்யாண விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கந்த சஷ்டி த... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இன்று முன்னோடி மனுநீதி நாள் முகாம்

கோவில்பட்டி வட்டத்துக்குள்பட்ட அனைத்து குறுவட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் சனிக்கிழமை (நவ.9) நடைபெறுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி வட்டாட்சியா் சரவணப் பெருமாள் விடுத்த... மேலும் பார்க்க