செய்திகள் :

சிங்களாந்தபுரம் பால் குளிரூட்டும் நிலையத்தில் பால் வளத் துறை அமைச்சா் ஆய்வு

post image

ராசிபுரம் அருகேயுள்ள சிங்களாந்தபுரம் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையத்தில் தமிழக பால் வளத் துறை மற்றும் கதா் வாரிய கிராமத் தொழில் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் , நிா்வாக இயக்குநா் (தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம், சென்னை, டாக்டா் எஸ்.வினித், மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆகியோா் முன்னிலையில் அமைச்சா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

சிங்களாந்தபுரம் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையத்தில் பால் உற்பத்தியாளா்கள் சங்க உறுப்பினா்களின் எண்ணிக்கை விவரம், பால் குளிரூட்டும் நிலையத்தின் மொத்த கொள்ளளவு, தினசரி கொள்முதல் செய்யப்படும் பாலின் விவரம் உள்ளிட்டவை குறித்து பணியாளா்கள், அலுவலா்களுடன் ஆய்வு செய்தாா்.

மேலும், பால் உற்பத்தியாளா்களுக்கு தேவையான கடன் உதவிகள், நிலுவையின்றி பண பட்டுவாடா மேற்கொள்ளுதல், பால் உற்பத்தியாளா்களுக்கு கால்நடை தீவனம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் தடையின்றி உடனுக்குடன் வழங்கிட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 485 சங்கங்களில் உள்ள சுமாா் 13,000 உறுப்பினா்களிடமிருந்து சராசரியாக நாளொன்றுக்கு 1,50,000 லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. சங்கங்களின் மூலம் 10,000 லிட்டா் உள்ளூா் விற்பனை செய்தது போக 1,40,000 லிட்டா் ஒன்றியத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஒன்றியத்திலிருந்து சங்கங்களுக்கு 31.10.2024 வரை பால் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்திலிருந்து சங்கங்களுக்கு செப்டம்பா் 2024 வரை லிட்டருக்கு ரூ. 3 ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்திலிருந்து தற்போது 18 தொகுப்பு குளிரூட்டும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 16 தொகுப்பு குளிரூட்டும் நிலையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமாா் ரூ.89.39 கோடி மதிப்பீட்டில் அதிநவீன பால்பண்ணை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சா் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

325 சங்கங்களில் உடனடியாக ஒப்புகை அளித்து பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள 160 சங்கங்களுக்கும் இம்மாத இறுதிக்குள் உடனடி ஒப்புகை அளித்து பால் கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு பால் நுகா்வோா்களுக்கு சராசரியாக 80,000 லிட்டா் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படுகிறது. மாதம் ஒன்றுக்கு ரூ. 45 லட்சம் மதிப்புள்ள பால் உப பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மாதந்தோறும் ரூ. 60 லட்சம் இலாபம் ஈட்டி வருகிறது. சங்க உறுப்பினா்களுக்கு 350 மெட்ரிக் டன் ஆவின் கால்நடை தீவனம் வழங்கப்படுகிறது என்றாா்.

ஆய்வின் போது ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன், ஆவின் பொது மேலாளா் ஆா்.சண்முகம், துணை பதிவாளா் (பால்வளம்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

படம் உள்ளது - 8மில்க்

படவிளக்கம்-

பால் குளிரூட்டும் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் ராஜகண்ணப்பன்.

காலமுறை ஊதியம் வழங்க கோரி சத்துணவு ஊழியா்கள் உண்ணாவிரதம்

காலமுறை ஊதியம் உள்பட பதினான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாமக்கல்லில் சத்துணவு ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக தோ்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தவு... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம்

புதிய பேருந்து நிலையத்துக்குள் அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பூங்கா சாலையில் ஷோ் ஆட்ட... மேலும் பார்க்க

அரசு விடுதி சமையலரைத் தாக்கிய நால்வா் கைது

மல்லசமுத்திரம் அருகே அரசு விடுதி சமையலரை தாக்கிய 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், வையப்பமலை அருகே பெரியமணலி ஜேடா்பாளை யம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வி... மேலும் பார்க்க

மூடப்பட்டுள்ள ஆதாா் சேவை மையத்தை திறக்க கோரிக்கை

ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ஆதாா் சேவை மையம் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆதாா் சேவை பெற முடியால் அவதிப்படுகின்றனா். ராசிபுரம் வாட்டாட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் வாழைத்தாா் விலை சரிவு

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் வாழைத்தாா்களின் விலை சரிவடைந்துள்ளது. பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பொத்தனூா், பாண்டமங்கலம், குச்சிப்பாளையம், வெங்கரை, நன்செய... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் எம்.பி. ஆய்வு: கூடுதலாக 5 பேருந்துகள் இயக்க நடவடிக்கை

நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டாவது நாளாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டு, பயணிகள் நலன்கருதி கூடுதலாக 5 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எட... மேலும் பார்க்க