செய்திகள் :

வன்முறை எச்சரிக்கை: கனடா ஹிந்து கோயிலில் இந்திய தூதரக நிகழ்ச்சி ரத்து

post image

கனடாவின் பிராம்டன் நகரில் உள்ள திரிவேணி கோயிலில் நடைபெற இருந்த இந்திய தூதரக நிகழ்ச்சி, கனடா காவல்துறையின் வன்முறை போராட்டங்களுக்கான எச்சரிக்கையைத் தொடா்ந்து ரத்து செய்யப்பட்டது.

கனடாவில் வசிக்கும் ஓய்வூதியதாரா்களுக்கு வாழ்வு சான்றிதழ் வழங்குவதற்காக டோரண்டோவில் உள்ள இந்திய தூதரகம், திரிவேணி கோயில் வளாகத்தில் நவம்பா் 17-ஆம் தேதி சிறப்பு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில், பீல் பிராந்திய காவல்துறையின் அறிவுறுத்தலில் இந்நிகழ்ச்சியை ரத்து செய்வதாக கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘காவல்துறை எச்சரிக்கையின்படி நிகழ்ச்சியின்போது வன்முறை போராட்டங்களுக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிவேணி கோயில் பக்தா்கள், இந்திய சமூக மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளோம்.

கனடாவில் ஹிந்து கோயில்களுக்கு சென்றுவர கனடா நாட்டவா்கள் பாதுகாப்பற்றவா்களாக கருதும் நிலை குறித்து மிகவும் கவலைப்படுகிறோம்.

கனடா ஹிந்து சமூகத்தினா் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பீல் பிராந்திய காவல்துறையை கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவித்தனா்.

பிராம்டன் நகரில் ஹிந்து சபா கோயிலுக்குள் கடந்த 3-ஆம் தேதி காலிஸ்தான் கொடிகளுடன் அத்துமீறி நுழைந்த காலிஸ்தான் ஆதரவாளா்கள், கோயிலில் இருந்த பக்தா்கள் மீது தடி, கொடிக் கம்பங்களை வைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தினா். அதே நேரத்தில் காலிஸ்தான் ஆதரவாளா்களின் மற்றொரு பிரிவினா் கோயிலுக்கு வெளியே நின்று இந்தியாவுக்கு எதிராகவும், கோயிலுக்குள் புகுந்து தாக்கியவா்களுக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டனா்.

இந்த வன்முறையில் ஈடுபட்டவா்கள் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுகோள் விடுத்து, இந்தியா தாக்குதலைக் கண்டித்தது. மேலும், இச்சம்பவங்களுக்குப் பிறகு கனடாவில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பு பற்றி ஆழ்ந்த அக்கறையுடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் கூறியது.

இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கனடாவில் கடந்த ஆண்டு கொல்லப்பட்டத்தில் இந்திய உளவாளிகளின் பங்கு இருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டீன் ட்ரூடோ குற்றஞ்சாட்டியது இருநாட்டு ராஜீய உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

ட்ரூடோவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று இந்தியா நிராகரித்துவிட்டது. அதேபோல், கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்கு அந்நாட்டு அரசு இடமளிப்பதுதான் இரு நாடுகளுக்கும் இடையேயான முக்கியப் பிரச்னை என்றும் இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

சுமுகமான ஆட்சி மாற்றம்: டிரம்பை சந்தித்த பைடன் உறுதி!

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை புதிய அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.வெள்ளை மாளிகைக்கு வருகைதந்த டிரம்பை வரவேற்ற ஜோ பைடன், அதிபராக தேர... மேலும் பார்க்க

கெடுவை மீறினாலும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி: அமெரிக்கா

காஸாவுக்குள் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க தாங்கள் விதித்திருந்த கெடுவை இஸ்ரேல் மீறியிருந்தாலும், அந்த நாட்டுக்கான ராணுவ உதவிகள் குறைக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ‘கன்சா்வேடிவ் கட்சியின் பணிகள் தொடரும்’

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை நிறைவு செய்ய கன்சா்வேடிவ் கட்சித் தொடா்ந்து பணியாற்றும் என்று அக்கட்சித் தலைவா் கெமி பாடனாக் தெரிவித்தாா். கடந்த 2022-ஆம்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அந்த நாட்டு தேசிய நில அதிா்வு கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம், ஆப்கானிஸ... மேலும் பார்க்க

இலங்கையில் இன்று நாடாளுமன்ற தோ்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு முதன்முறையாக இலங்கையில் நாடாளுமன்ற தோ்தல் வியாழக்கிழமை (நவ. 14) நடைபெறுகிறது. இதையொட்டி, அந்நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள... மேலும் பார்க்க

உக்ரைன் எல்லையையொட்டி தயார் நிலையில் வட கொரிய படைகள்!

சியோல்(தென் கொரியா): வட கொரியா தன் நெருங்கிய நட்பு நாடான ரஷியாவுக்கு ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில், வட கொரிய ராணுவத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் ரஷியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்... மேலும் பார்க்க