செய்திகள் :

ரூ.10,000 கோடி சொத்து: ஷாருக் கான், சல்மான் கானை பின்னுக்குத் தள்ளிய பாலிவுட்டின் பணக்கார குடும்பம்!

post image

சமீபத்தில் வெளியான இந்திய பணக்காரர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இடம் பெற்று இருந்தார். பாலிவுட்டில் செல்வாக்கு மிகவும் நடிகராகவும் ஷாருக் கான் இருக்கிறார். சொந்தமாக ஐ.பி.எல் கிரிக்கெட் அணி உட்பட ஏராளமான சொத்துகள் அவருக்கு இருக்கிறது. ஆனால் பாலிவுட்டில் மிகவும் பணக்கார குடும்பம் எது என்பது தொடர்பாக தற்போது வெளியாகி இருக்கும் செய்தி வேறு மாதிரி இருக்கிறது.

ஹூருன் இந்தியா, பாலிவுட்டில் எந்த குடும்பத்திற்கு அதிக சொத்து இருக்கிறது என்பது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துடன் டி சீரியஸ் மியூசிக் கம்பெனி உரிமையாளர் புஷன் குமார் குடும்பம் முதலிடத்தில் இருக்கிறது.

பாடகர் குல்சல் குமார் சகோதரர்கள் குடும்பத்திற்கு 10 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது. பாலிவுட்டின் பணக்கார குடும்பம் என்ற பெயரை அதிக நாட்கள் யஷ்ராஜ் ஸ்டூடியோ உரிமையாளரான சோப்ரா குடும்பம் வைத்திருந்தது. சில காலம் கபூர் குடும்பமும் வைத்திருந்தது. ஆனால் இப்போது அந்த இடத்தை புஷன் குமார் குடும்பம் தட்டிப்பறித்து இருக்கிறது. சோப்ரா குடும்பத்திற்கு 8 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக ஹூருன் இந்தியா தெரிவித்துள்ளது. இதே போன்று ஷாருக் கான் குடும்பத்திற்கு ரூ.7,500 கோடியும், சல்மான் கான் குடும்பத்திற்கு 3,500 கோடியும் சொத்து இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புஷன் குடும்பத்தில் 4 முதல் 5 வாரிசுகள் இருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற விபரத்தை தெரிவிக்கவில்லை. ஆனால் சகோதரிகள் துள்சி குமாருக்கு ரூ.250 கோடியும், குஷாலி குமாருக்கு ரூ.100 கோடியும் சொத்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சிய சொத்து புஷன் குமார் மற்றும் அவரது சித்தப்பாவும், டி சீரியஸ் இணை உரிமையாளருமான கிஷன் குமார் ஆகியோருக்கு சொந்தமாகும். புஷன் குமாரின் தந்தை குல்ஷன் குமார் டெல்லியில் பழவியாபாரியாக வாழ்க்கையை தொடங்கினார். குல்ஷன் குமாரும் அவரது தந்தையும் சேர்ந்து கேசட் விற்பனை செய்யும் கடை ஒன்றை விலைக்கு வாங்கினர். அதன் பிறகு அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு டி சீரியஸ் என்ற கம்பெனி ஆரம்பித்து சொந்தமாக கேசட் வெளியிட்டனர். இன்றைக்கு ஸ்டூடியோ, நடிப்பு கல்லூரி போன்ற ஏராளமான சொத்துகள் இருக்கிறது.

ஷிண்டேவின் காரை மறித்து `துரோகி' என்று கத்திய இளைஞர்: வீட்டிற்கு அழைத்து பாராட்டிய தாக்கரே!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தற்போது முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே கடந்த 2022ம் ஆண்டு சிவசேனாவை உடை... மேலும் பார்க்க

'ஆன்மிக நிகழ்ச்சி; வெளியான ஆடியோவால் சர்ச்சை’ - சென்னை மீனாட்சி கல்லூரியில் நடந்தது என்ன?

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளமீனாட்சி மகளிர் கல்லூரியில் சிருங்கேரி பீடத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் மாணவிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும், மீறி வராதவர்கள் மதிப்பெண் குறைப்பு உள்ளிட்ட பின... மேலும் பார்க்க

வெல்லப்போவது அஜித் பவாரா சரத் பவாரா? - தேர்தலில் 36 இடங்களில் நேரடியாக மோதும் பவார் கட்சிகள்!

மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணியும், எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மகாவிகாஷ் அகாடியும் பிரதானமாக போட்டியிடுகின்றன. தேர்தலில் கடுமைய... மேலும் பார்க்க

தேர்தலுக்காக குடும்பங்களை பிரித்த 'பவார்'கள் ; உறவுகளை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள்!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்திருக்கிறது. இத்தேர்தலில் இரண்டு கூட்டணியிலும் 6 கட்சிகள் போட்டியிடுகின்றன. கட்சிகள் பிளவு பட்டது போல் அரசியல் மற்றும் தேர்தலுக்காக குடும்பங்களிலும் அதிக அளவில் ... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: சந்திரசூட் ஓய்வு டு ட்ரம்ப் வெற்றி - இந்த வார கேள்விகள்... பதிலளிக்க ரெடியா?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் ஒய்வு, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் என இந்த வாரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekl... மேலும் பார்க்க