TNEB: ஊழல் குற்றச்சாட்டு; ``அதானிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை" -அமைச...
நிறம், நடை, உடை... பூர்வகுடிகளால் கொல்லப்பட்ட ஜேம்ஸ் குக்; வரலாறு உணர்த்தும் உண்மைகள்| My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
டிவி, ரேடியோ, மாத இதழ், வார இதழ், நாளிதழ் என எதனை திறந்தாலும் தவிக்க முடியாத ஒரு விளம்பரத்தை நீங்கள் கண்டிப்பாக கேட்டு இருப்பீர்கள் பார்த்து இருப்பீர்கள் படித்து இருப்பீர்கள். அது நிற மாற்றம் தரும் விளம்பரங்கள். இயல்பாக உள்ள நிறத்தில் இருந்து தோலின் நிறத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது.
இந்த நிறம் என்ன செய்து விடும்? உலகமெங்கும் இது சார்ந்த வாழ்வியல் எப்படியான வரலாறுகளை தந்து சென்றுள்ளது.
ஆகஸ்ட் 28: 1963 ஆம் ஆண்டு.
மார்ட்டின் லூதர் கிங் அவர்கள், இரண்டு லட்சம் பேருடன் ‘என் கனவு யாதெனில்...’ என்ற புகழ்பெற்ற வார்த்தைகளுடன் சொற்பொழிவாற்றினார்.
`நீக்ரோக்கள்' எனும் பெயரில் நிறத்தின் அடிப்படையில் பல லட்சம் மக்கள் பல ஆண்டுகளாக அடிமைகளாக இருந்து அவர்களின் உழைப்பால் நாட்டினை வளமாக்கி தங்களின் வாழ்வினை வளமாக மாற்றத் தெரியாதவர்களாக வாழ்ந்தனர். அவர்கள் வாழ்வின் ஒரு விடி வெள்ளியாக மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் தன் சிந்தனைகள் மூலம் உழைத்தார்.
`சூரியன் மறையாத நாடு’
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் லண்டனை தலைநகராகக் கொண்ட ஒரு நாடு பிரிட்டன் என்பதை அறிவீர்கள். அந்த நாட்டிற்கு அந்த நாளில் ஒரு பெயர் உண்டு. அது "சூரியன் மறையாத நாடு" என்பதே அது. ஆம் 1947 ஆகஸ்ட் 15 -ம் தேதிக்கு முன்பு வரை நமது நாடு மட்டுமல்ல வங்கதேசம் பூட்டான், பாகிஸ்தான் போன்ற நமது அண்டை நாடுகளும் பிரிட்டனின் ஒரு பகுதியாக இருந்தது என்பது வரலாறு.
அது உலகநாடுகளின் இடையே கப்பல் போக்குவரத்து எனும் கடல் வழிப் பயணம் மட்டுமே இருந்து வந்த காலம். கொலம்பஸ் இந்தியாவை தேடி அமெரிக்கா சென்றது, வாஸ்கோடகாமா கடல் வழியாக கோழிக்கோடு வந்து இறங்கியது தொடர்ச்சியாக கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் வாணிபம் செய்ய வந்து இறங்கிய ஆங்கிலேயர்கள் என நீங்கள் அனைவரும் அறிந்த வரலாறு.
பொதுவாகவே ஒரு நாடு விட்டு நாடு சென்று இறங்கும் போது வெளிநாட்டு பயணி என்ற அடையாளத்துடன் விநோதமான பார்வையை நீங்களும் பார்த்து இருப்பீர்கள்.
மதராசபட்டினம் திரைப்படத்தில் நாயகியாக வரும் ஏமி ஜாக்சன் அவரிடம் மொழி மாற்றம் செய்ய உதவியாளராக வரும் நடிகர் ஹனீபா அவர்களின் பவ்யம் என நீங்கள் பார்த்து இருப்பீர்கள் .
பண்டைய கால பிரிட்டிஷ்காரர்கள் கடல் வழி பயணம் மூலம் பல நாடுகளை தேடி கண்டுபிடித்த போது அந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களின் மனநிலை எப்படி இருந்தது அந்த நாட்டினை மக்களை தங்களின் வசதிகளுக்கு ஏற்ப எப்படியெல்லாம் பயன்படுத்தி `சூரியன் மறையாத நாடு’ என்ற பெயரில் உலகளாவிய சாம்ராஜ்யத்தை கட்டமைத்தனர். இதற்கு இவர்களது தோற்றம் நிறம் எப்படி உதவியது? காலப் போக்கில் அதன் உண்மையை உணரச் செய்த ஒரு இயற்கை அதன் பிறகு மக்களின் உணர்வு எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.
கடல் வழி பயணம் மூலம் கப்பல் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுவதும் புதிய நிலப்பரப்புகளை பிரிட்டன் தேடிக் கொண்டிருந்த காலம் அது. அவ்வாறு புதிய நாடுகளை கண்டறிந்து உலக நாடுகளின் வரைபடத்தை உருவாக்கி கொண்டு இருந்த ஒருவர் கேப்டன் ஜேம்ஸ் குக்.
ஜேம்ஸ் குக் தனது இளம் வயதிலேயே பிரிட்டிஷாரின் வணிக் கடற்படையில் ஒருவராக சேர்ந்து சில வருடங்கள் சில போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவ்வாறான போரில் செயின்ட் லாரன்சு நதியின் நுழைவு வாயில் பகுதியில் இருந்த பெரும் பகுதியை ஆய்வு செய்து அதனை வரைபடத்தை தயார் ஆக்கினார். இவரது இந்த முயற்சி பிரிட்டிஷாரின் வெளிநாட்டு ஆய்வுகளின் திசைக்கு முக்கியமான ஒரு ஆவணமாக இருந்தது.
ஜேம்ஸ் குக்கின் இந்த செயல் மூலம் 1768 -ம் ஆண்டு முதல் மூன்று பசிபிக் பெருங்கடல் பயணங்களின் கேப்டனாக நியமனம் செய்யும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.
ஜேம்ஸ் குக் மிகவும் உற்சாகமாக தன் கடல் வழி பயணம் மூலம் உலகின் பெரும்பாலான கண்டறியப்படாத பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து, நியூசிலாந்தில் இருந்து பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடுகள் வரை வரைபடம் ஆக்கினார்.
கூடவே அவர் கண்ட நிலப் பரப்பில் உள்ள மக்கள் அவர்களின் வாழ்க்கை முறை திறன்கள் உடல் தைரியம் அவர்களை வழிநடத்தும் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தினார்.
ஜேம்ஸ் குக்கின் இத்தகைய பயணம் மூலம் பல புதிய நாடுகளை கண்ட பிரிட்டன் அரசு ஒவ்வொரு கடல் பயணம் முடிந்து நாடு திரும்பிய பின்னர் தன் பயணத்தின் மூலம் கண்டறிந்த நாடுகள் பயணவழி வரைபடம் என எண்ணற்ற புவியியல் அறிவியல் தகவல்களை சமர்ப்பிக்க உற்சாகமாக அடுத்து மூன்று கடல் வழி பயணங்களை மேற்கொள்ளச் செய்தது அன்றைய பிரிட்டிஷ் அரசு.
மிகவும் உற்சாகமாக புதிய நாடுகளை கண்டறியும் ஆவலுடன் தன் மூன்றாவது கடல் வழி பயணத்தை ஆரம்பித்தார். அவ்வாறாக 1769 பிரிட்டனின் சேர்ந்த ஜேம்ஸ் குக் ஹாவாய் தீவுகளில் வந்து கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்தார். கப்பல் கேப்டனாக இருந்த ஜேம்ஸ் குக்கின் வழிகாட்டுதல் படி புதிய நிலப்பரப்பை கண்டு பிடித்தார்.
நிலப் பரப்பிற்கு முன்பாக பல நூறு மீட்டர்கள் கடலின் ஆழமான பகுதியில் நங்கூரமிட்டு கப்பலை நிறுத்தி விட்டு படகுகள் மூலம் தீவில் 1769 ம் ஆண்டு கேப்டன் ஜேம்ஸ் குக் மற்றும் அவரது சகாக்கள் இறங்கிட அவர்களின் தோற்றம், உடை, நிறம் போன்றவற்றை மிகவும் விநோதமான கண்டனர்.
இப்போது ஏலியன்ஸ் என்று கூறுவது போல் அன்று அந்த பழங்குடியினர் இவர்களை தங்களை காத்திட வந்த கடவுள்கள் தான் தங்களின் தீவுக்கு வந்து விட்டார்கள் என்பது போல் இவர்களை கொண்டாடினார்கள்.
இவர்கள் தேவைகளை பார்த்துப் பார்த்து செய்தார்கள். இவர்களின் கட்டளைகள் ஏவல்களை காத்திருந்து கவனமுடன் செய்து முடித்தனர். ஜேம்ஸ் குக் வழக்கம் போல் நில வரைபடம் புவியியல், அறிவியல் போன்ற ஆவணங்களை தயார் செய்தார். தீவின் பூர்வகுடி மக்களின் பார்வையில் கடவுள்களாகவே இருந்து கவனித்துக் கொள்ளப் பட்டனர் ஜேம்ஸ் குக் மற்றும் அவரது சகாக்கள்.
இப்படியாக சென்று கொண்டிருந்த போது ஒருநாள் இவர்கள் கப்பலை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்த கடல் பகுதியில் கடுமையான கடல்புயலால் கடலில் பெரும் அலைகள். தீவுக்குள்ளும் கடல் நீர் பாய்ந்து கடுமையான சேதம் ஏற்பட்டது. பூர்வ குடிகளுடன் ஜேம்ஸ் குக் மற்றும் அவரது சகாக்களும் கடல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
புயல் ஓய்ந்த பிறகு ஜேம்ஸ் குக் மற்றும் அவரது சகாக்கள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்த தங்களின் கப்பல் புயலால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன தங்களின் நாடு திரும்பிச் செல்ல சரியாக உள்ளதா என்று அறிந்து கொள்ள சிறு சிறு படகுகள் மூலம் கப்பலுக்கு சென்றனர்.
அதுவரை ஜேம்ஸ் குக் மற்றும் அவரது சகாக்களை கடவுள்கள் என்று கருதி சேவகம் செய்து வந்த பூர்வ குடிகள் இந்தக் கடல் புயலால் தங்களைப் போன்றே இவர்களும் பாதிக்கப்பட்டனர்.
இவர்களால் உடனடியாக கடல் புயலை நிறுத்தவோ தங்களை பாதுகாத்துக் கொள்ளவோ இவர்களால் ஏதும் செய்ய முடியாத மனிதர்கள்தான் என்பதை உணர்ந்து கொண்ட நேரம் அது. ஜேம்ஸ் குக் மற்றும் அவரது சகாக்கள் கப்பல்களில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு கரைக்கு திரும்பிய நேரம்.
தீவின் கரையில் பூர்வக் குடிகள் அனைவரும் கடுமையான கோபத்துடன் கைகளில் வில் அம்பு வேல் போன்ற ஆயுதங்களுடன் நின்றனர்.
கரையில் வந்து இறங்கிய அடுத்த நிமிடமே ஜேம்ஸ் குக் மற்றும் அவரது சகாக்களை நோக்கி தீவின் பூர்வகுடிகள் எய்த அம்புகள் பாய்ந்து தாக்கிட அனைவரும் அப்படியே கடற்கரையில் வீழ்ந்தனர்.
இத்தனை நாள்களாக இவர்களை இவர்களின் நிறம் நடை உடை போன்றவற்றின் மூலம் இறைவன் என்று நம்பி இருந்த பூர்வ குடிகளின் எண்ணங்களை ஒரு கடல் புயல் ஒட்டுமொத்தமாக மாற்றிப் போட்டது.
தன் வாழ்நாளின் பெரும் பகுதியை கடல் வழி பயணத்திலேயே செலவழித்து இறுதியில் கடற்கரையில் வீழ்ந்து கிடந்த ஜேம்ஸ் குக் மற்றும் அவரது சகாக்கள் உடலை கடைசியில் கடலில் இருந்து கிளம்பி வந்த அலைகள் தழுவி கடலுடன் எடுத்துச் சென்றன.
நிறம் நடை ,உடை போன்ற எதுவும் நிரந்தரம் இல்லை. உண்மையே நிலையான ஒன்று என்பதற்கு ஜேம்ஸ் குக்கின் மரணமே சாட்சி என்றால் அது மிகையல்ல!
- வீ.வைகை சுரேஷ்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...