செய்திகள் :

Train Travel: உலகின் மிக நீண்ட ரயில் பயணம்... 21 நாள்; 18,755Km; 13 நாடுகள் - எங்கிருந்து தெரியுமா?

post image

மறக்க முடியாத ரயில் பயணம்

ரயில் பயணம்... நினைக்கும் போதே அந்த ஜன்னலோர காற்றும், நம்மை கடந்து செல்லும் வயல்களும், மரங்களும், ரயிலின் சப்தமும் எப்போதும் ரம்மியமான அனுபவத்தைப் பரிசளிக்கும். அந்தப் பயணம் நீண்ட பயணமாக இருந்தால், நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் என தொடர்ந்து பயணித்தால், அந்தப் பயணத்தில் பல்வேறு கலாச்சாரம், மொழி, இனக் குழுக்கள், பல்வேறு முகச் சாயல்கள், பல காலநிலை எனச் சந்தித்தால் அந்தப் பயணம் வாழ்வின் மறக்க முடியாத பயணமாகவே அமைந்து விடும். அப்படி ஒரு பயணம் இருக்கிறதா... என்றால் இருக்கிறது!

போர்ச்சுக்கல் ரயில் நிலையம்

13 நாடுகளுக்கு சுற்றுலா செல்ல முடியும்..

உலகின் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி, பூமியின் அரைக்கோள வடிவில் பயணம் மேற்கொள்ள நாம், போர்ச்சுகல் நாட்டின் அல்கார்வ் பகுதியில் இருக்கும் லாகோஸ் நகரம் செல்ல வேண்டும். அங்கிருந்து புறப்பட்டு, ஸ்பெயின், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, வியட்நாம், தாய்லாந்து என 13 வெவ்வேறு நாடுகளுக்கு மத்தியில் பயணம் செய்து சிங்கப்பூர் நோக்கிச் செல்ல வேண்டும். உலகின் மிக நீண்ட தூர ரயில் பயணமான இந்த திட்டத்தின் படி, சுமார் 11,654 மைல்கள், அதாவது 18,755 கிலோமீட்டர் தூரத்தை 21 நாள் ரயில் பயணம் மூலம் கடக்கிறோம். மேலும், இந்தப் பயணத்தில் ஒவ்வொரு நாட்டின் முக்கிய நகரங்களான அதாவது பாரிஸ், மாஸ்கோ, பெய்ஜிங், பாங்காக் போன்ற 11 வழித்ததங்களையும் கடந்து செல்வோம். அதனால், அந்ததந்தப் பகுதியில் இருக்கும் சுற்றுலா தளங்களையும் காண முடியும்.

பொழுது போக்கு, பயண விரும்பிகள், புதுப்புது கலாச்சாரங்களை தெரிந்துக் கொள்ள விரும்புபவர்கள், அனுபவங்களை சேகரிப்பவர்கள், உலகை சுற்ற விரும்புபவர்கள் எனப் பலதரப்பட்டவர்களுக்கும் இந்தப் பயணம் புது அனுபவங்களைத் தரும். இந்தப் பயணத்தின் போது, பல இரவுகள் வெளியில் தங்க வேண்டிவரும், பல நாடுகள் பயணம் என்பதால் ஆவணங்களை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும். ஒரு ரயிலுக்கும் மற்றொரு ரயிலுக்கும் இடையே மாறுவதற்கு உதாரணமாக வியட்நாம், கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர் இடையேயான வழித்தடங்களில் பேருந்தில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். அதனால் பயணத்தை மிகச் சரியாக திட்டமிட வேண்டும்.

ரயில் பயணம்

விமான செலவுகளை விட குறைவு..

இந்த நீண்ட தூர ரயில் பயணத் திட்டத்தின் பின்னணியில் பல நாடுகளின் அமைப்புகள், ரயில்வே நிர்வாகம் இயங்குகிறது. அதனால்தான் இந்தப் பயணத் திட்டமும் சத்தியமாகியிருக்கிறது. சமீபத்தில் லாவோஸுக்கும் சீனாவுக்கும் இடையில் திறக்கப்பட்ட ரயில் பாதைதான் ஐரோப்பா - ஆசியாவை இணைக்கும் பாலமாக இயங்குகிறது. மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கு மத்ததியில் பொருளாதாரம், போர்ச்சுகல் - சிங்கப்பூருக்கு தடையற்ற பயண அனுபம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கிறது. சுமார் 13 நாடுகள், 11 தலை நகரங்களை சுற்றிப் பார்க்க விமான செலவுகளை விட இந்தத் திட்டத்தின் மூலம் அது மிக மிகக் குறைவாகவே இருக்கிறது எனச் சுற்றுலா பயணிகள் மகிழச்சியை தெரிவித்து வருகின்றனர். போர்ச்சுக்கல் - சிங்கப்பூர் செல்ல ரயில் பயண செலவாக 1,350 டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,15,000 ஆகும் எனக் கூறப்படுகிறது. அப்புறம் என்ன புறப்படலாமா?

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

சுற்றிப் பார்க்க ஏற்காடு மட்டும்தான் இருக்கிறதா... சேலத்து இராமாயணம்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

இனி 90 நாள்களுக்கு முன்பே அரசு பேருந்துகளில் டிக்கெட் புக்கிங் செய்யலாம்... எப்படி?! | How to

சொந்த ஊருக்கு அல்லது வெளியூருக்கு செல்ல மக்களின் முதல் சாய்ஸ் டிரெயின் என்றால், இரண்டாவது சாய்ஸ் பஸ். தனியார் ஆம்னி பேருந்துகளில் செல்ல பட்ஜெட் கட்டுப்படி ஆகாதவர்களுக்கு அரசு பேருந்துகளே நம்பர் ஒன் சா... மேலும் பார்க்க