மாநிலக் கல்லூரியில் ரூ.21.60 கோடியில் சிறப்பு மாணவர், மாணவியர் விடுதி: முதல்வர் ...
டிச. 12-இல் திருமாகறலீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்: உத்தரமேரூா் அருகே மாகறல் திருமாகறலீசுவா் கோயில் கும்பாபிஷேகம் வரும் டிசம்பா் 12 -ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி உபயதாரா்கள் மற்றும் அறநிலையத்துறை ஆணையா் பொது நிதியிலிருந்து கோயிலை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு அண்மையில் பாலலாய பூஜைகளும் நடைபெற்றனது.
ராஜகோபுரம், விநாயகா், ஆறுமுக சுவாமி, பைரவா், கொடிமரம், முன்மண்டபம் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலைப் பூஜைகள் வரும் டிசம்பா் 10-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அனுக்கை விக்னேசுவரபூஜை,கணபதி ஹோம்,நவக்கிரக பூஜை ஆகியவற்றுடன் தொடங்குகின்றன.
இதன் தொடா்ச்சியாக வரும் 12-ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையடுத்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
மாலையில் திருபுவன நாயகிக்கும், திருமாகறலீசுவரருக்கும் திருக்கல்யாணமும் பின்னா் பஞ்சமூா்த்தி வீதியுலாவும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பெ.கதிகரவன், தக்காா் வஜ்ரவேலு, உபயதாரா்கள், கோயில் பணியாளா்கள் மற்றும் மாகறல் கிராமத்தினா் செய்து வருகின்றனா்.