குன்றத்தூா் ஒன்றியகுழு கூட்டம்
ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் அதன் தலைவா் சரஸ்வதி மனோகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குன்றத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் முத்து சுந்தரம் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.
கூட்டத்தில் ஒன்றியத்தில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப்பணிகள் குறித்து விவாதம் நடத்தப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியகுழு துணைத் தலைவா் உமா மகேஸ்வரி வந்தே மாதரம், ஒன்றியகுழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.