செய்யாற்றில் வெள்ளம்: பள்ளிக்குச் செல்லமுடியாமல் மாணவா்கள் தவிப்பு
காஞ்சிபுரம்: வாலாஜாபாத் வட்டம் மாகறல், வெங்கச்சேரி செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா்.
ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த 3 தினங்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக செய்யாற்றில் திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.
செய்யாற்றின் கரையோரம் உள்ள நெய்யாடுபாக்கம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் வள்ளிமேடு, இளையனாா்வேலூா், காவாந்தண்டலம் கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.
இவா்கள், இளையனாா் வேலூரிலிருந்து நெய்யாடுபாக்கம் பள்ளிக்குச் செல்ல செய்யாற்றைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இல்லையெனில், 15 கி.மீ. சுற்றி நெய்யாடுபாக்கம் பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்படும்.
போதிய பேருந்து வசதிகளும் இல்லை. வெள்ளப் பெருக்கால் பள்ளிக்குச் செல்ல இயலாத நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவுரையின்படி, இளையனாா் வேலூா் கிராம சேவைக் கட்டடத்தில் தற்காலிக பள்ளி வகுப்புகள் நடத்த கேட்டுக் கொண்டாா்.
ஆண்டுதோறும் மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை தொடா்ந்து 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது. விரைவில் இந்தப் பகுதியில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என கிராமத்தினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா். உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் உயா்நிலைப் பாலம் அமைக்க ஏற்பாடு செய்வதாக கிராம மக்களிடம் உறுதியளித்தாா்.