செய்திகள் :

பட்டாபிராமில் ரூ.330 கோடியில் புதிய டைடல் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் நாளை திறப்பு!

post image

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் நாளை(நவ. 22) திறந்து வைக்கிறார். 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

பட்டாபிராம் டைடல் பூங்கா திறப்பு விழா

தமிழ்நாட்டின் வடபகுதியிலுள்ள நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்கத்துடன்  திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், 330 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்கா முதல்வர் ஸ்டாலினால் நாளை(நவ. 22) திறந்து வைக்கப்படுகிறது. 

இக்கட்டடத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான, நவீன தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டட மேலாண்மை வசதிகள், சிசிடிவி கேமரா வசதிகள், 24X7 பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இக்கட்டடமானது, 6,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையிலும் பசுமை கட்டடம் வழிமுறைகளின்படியும் கட்டப்பட்டுள்ளது.

பட்டாபிராமில் இப்புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம்  தமிழ்நாட்டின் வடபகுதியைச் சார்ந்த குறிப்பாக திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும். 

நாளை நடைபெறவுள்ள பட்டாபிராம் டைடல் பூங்கா திறப்பு விழாவின்போது, பல்வேறு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அப்பூங்காவில் தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கவுள்ளார்.

இதையும் படிக்க: முதல் முறை.. உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்!

காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம் திறப்பு விழா

இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் நாளை (22.11.2024) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தால் முதல்கட்டமாக ரூ. 18.18 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைக்கவுள்ளார்.

இப்பெருங்குழும திட்டத்தின் முதல் பகுதியாக ரூ. 18.18 கோடி மதிப்பீட்டில் ரூ. 13.33 கோடி மானியத்துடன் வடிவமைப்பு மையம் (Engineering Design Centre), மறு பொறியியல் பரிசோதனைக் கூடம்
(Re-Engineering Lab), சேர்க்கை உற்பத்தி மையம் (Additive Manufacturing Centre), மேம்பட்ட பயிற்சி மையம், காப்புரிமை (Patent) பதிவு வசதி மையம், நவீன பரிசோதனை மையம் (Testing Lab) போன்றவை நிறுவப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 14-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழிற்பேட்டை சங்கத்தினரால் இணைந்து உருவாக்கப்பட்ட சிறப்பு நோக்கு ஊர்தி (Special Purpose Vehicle) மூலம் அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் பொது வசதிகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், இளம் தலைமுறை பொறியாளர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பயன்படுத்தி பயன் பெறலாம். 

டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கவில்லை: தமிழக அரசு

டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் மத்திய அரசின் அனுமதியுடன் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க... மேலும் பார்க்க

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையில் தற்காலிக பணிக்கு இரண்டு நபர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறைஆணையர்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி அயோவா சிறையில் அடைப்பு!

அமெரிக்கா சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோய், தற்போது அயோவாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அயோவாவில் உள்ள பொட்டவட்டமி கவுண்டி சிறையி... மேலும் பார்க்க

புறநகர் ரயில் சேவையில் நாளைமுதல் மாற்றம்: முழு அட்டவணை!

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளைமுதல்(நவ. 22) மாற்றம் செய்யவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:பராமரிப்பு மற்றும் பல்வேறு பணிகள் க... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மிகத் தீவிரமடைந்து இருப்பதாலும், கேரள கடலோரப்பகுதிகளை ஒ... மேலும் பார்க்க

தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு, கண்டன ஆர்ப்பாட்டம்

திருத்தணி: வழக்குரைஞா்கள் தொடர்ந்து தாக்கப்படுவது மற்றும் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சார்பு நீதிமன... மேலும் பார்க்க