அமெரிக்கா: முதல் திருநங்கை செனட்டருக்கு பெண்கள் கழிவறை செல்ல தடை! - என்ன நடந்தது...
நோயாளிகளுக்கு 12 ஆண்டுகளாக பாலியல் சித்ரவதை! மருத்துவருக்கு சிறை
குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட நோயாளிகளை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மருத்துவர் டேரியஸ் படூச்(57) கடந்த 12 ஆண்டுகளாக, சிறார்கள் உள்பட நோயாளிகள் பலரிடம் பாலியல் அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மருத்துவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேன்ஹேட்டன் பகுதியிலுள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் இத்தகையதொரு மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் அந்த மருத்துவர். அவரால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில், கடந்த மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 11 பேரிடம், விசாரணையின்போது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அந்த மருத்துவர் நோயாளிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நோயளிகளிடம் மருத்துவ பரிசோதனையின்போது, அதிலும் குறிப்பாக பெண்களிடம், பாலியல் பொம்மைகள் உள்ளிட்ட பிற உபகரணங்களை பயன்படுத்தி அவர் அத்துமீறி நடந்துகொண்டதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை, இத்தகைய குற்றச்செயல்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோரின் வழக்குரைஞர் தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. நோயாளி ஒருவரை மயக்க மருந்தளித்து அவரை மருத்துவமனைக்கு வெளியே அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவரின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளால், நோயாளிகள் உடல் ரீதியாக மட்டுமல்லாது மனதளவிலும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். “இந்த நபருக்கு எந்த தண்டனை வழங்கினாலும்சரி, பாதிக்கப்பட்டோர் அனுபவித்த வேதனை, அவர்களது வலியை திரும்பப்பெற இயலாது” என்று வழக்குரைஞர் மல்லோரி ஆலென் தெரிவித்தார்.
இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக மருத்துவர் தரப்பிலிருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.