2026 பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சர் செந...
மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணிக்கு 200 இடங்களில் வெற்றி: கருத்துக்கணிப்பு முடிவுகள்!
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (நவ. 20) ஒரேகட்டமாக நடைபெற்ற தோ்தலில் 58.45 சதவீத வாக்குகள் பதிவாகின.
மகாராஷ்டிரத்தில் ஆளும் ‘மகாயுதி’ கூட்டணியில் பாஜக 149, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 81, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளில் போட்டியிட்டன.
எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் காங்கிரஸ் 101, சிவசேனை (உத்தவ்) 95, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) 86 தொகுதிகளில் களம் கண்டன. இதுதவிர, பகுஜன் சமாஜ் கட்சி 237 தொகுதிகளில் போட்டியிட்டது. இக்கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 4,135 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி கூட்டணி 82 முதல் 102 இடங்களைக் கைப்பற்றும் என்றும், மறுபுறம், ஆளும் ‘மகாயுதி’ கூட்டணி 178 முதல் 200 இடங்களைக் கைப்பற்றும் என்றும் இன்ரு வெளியிடப்பட்டுள்ள ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பின் முடிவுகளில் தெரிய வந்துள்ளது.