செய்திகள் :

மகாராஷ்டிரா: 60 ஆண்டுகளுக்குப்பின் எதிர்க்கட்சித் தலைவர் இல்லா பேரவை!

post image

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு மிக பலத்த அடியைக் கொடுத்துள்ளது.

சனிக்கிழமை (நவ. 23) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஆளும் ‘மகாயுதி’ கூட்டணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், இக்கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்துள்ளன.

இக்கூட்டணியில் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இல்லாத அளவுக்கு, இந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்குப்பதிவு அதிகமாக நடைபெற்றுள்ளது. ஆளும் மகாயுதி கூட்டணியின் இமாலய வெற்றிக்கு இதுவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா தேர்தலில் சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் அந்தஸ்தை பெறும் அளவுக்கு கூட எந்தவொரு எதிா்க்கட்சியும் வெற்றி பெறவில்லை.

எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில், சிவசேனை (உத்தவ்) கட்சி 20, காங்கிரஸ் 16, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சி 10, சமாஜவாதி 2, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி 1 என 50 இடங்களே கிடைத்தன.

சட்டப்படி, மாநில சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 10 சதவீத உறுப்பினர்களை தனியாக ஒரு கட்சி பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து அக்கட்சியினருக்கு கிடைக்கும்.

ஆனால் இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தாலும், தனியொரு கட்சியாக எதிர்க்கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் எந்தவொரு கட்சிக்கும் அந்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. மகாராஷ்டிர பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் அந்தஸ்தை பெறும் அளவுக்கு (29) கூட எந்த எதிா்க்கட்சியும் வெற்றி பெறவில்லை.

இதனையடுத்து, மகாராஷ்டிரத்தில் புதிய அரசு பதவியேற்றதும், எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத நிலை கடந்த 60 ஆண்டுகளுக்குப்பின் இப்போது மீண்டும் உருவாகியுள்ளது.

சபரிமலையில் 9 நாட்களுக்குள் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!

ஆண்டுதோறும் மகரவிளக்கு யாத்திரையை முன்னிட்டு, சரண கோஷங்களுக்கு மத்தியில், இந்தாண்டு சபரிமலை நடை திறக்கப்பட்டது. இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்ததாவது: நவம்பர் 16 ஆம் தேதி க... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: புதிய அரசு பதவியேற்பு தேதி அறிவிப்பு!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் இக்கூட்டணிக்கு 5... மேலும் பார்க்க

தேர்தல் முறைகேடுகளைத் திசைதிருப்ப வன்முறையைத் தூண்டும் பாஜக: அகிலேஷ் யாதவ்!

தேர்தல் முறைகேடுகளைத் திசைதிருப்ப உ.பி.யில் ஜாமா மசூதி ஆய்வு விவகாரத்தில் பாஜக கலவரத்தைத் தூண்டிவிட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்ட... மேலும் பார்க்க

காங்கிரஸை மகாராஷ்டிர மக்கள் நிராகரித்துள்ளனர்: பாஜக தலைவர்

காங்கிரஸை மகாராஷ்டிர மக்கள் நிராகரித்துள்ளனர் என்று அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது, மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதை மகாயுதி தலைவர்க... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து.... ரூ. 26 லட்சம் இழப்பீடு பெற்ற நபர்!

மும்பை அருகேயுள்ள தானே நகரில் கடந்த 2019 ஆண்டு விபத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு தற்போது ரூ. 26 லட்சம் இழப்பீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது. மும்பை லால்பகதூர் சாலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மே 25 அன்று தனது... மேலும் பார்க்க

பஞ்சாபில் சர்வதேச எல்லை அருகே 2 டிரோன்கள் கண்டுபிடிப்பு

பஞ்சாபின் அமிர்தசரஸில் சர்வதேச எல்லைக்கு அருகில் இரண்டு ஆளில்லா விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இரண்டு டிரோன்களும் ஒரு ... மேலும் பார்க்க