செய்திகள் :

தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு, கண்டன ஆர்ப்பாட்டம்

post image

திருத்தணி: வழக்குரைஞா்கள் தொடர்ந்து தாக்கப்படுவது மற்றும் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சார்பு நீதிமன்றம் முன்பு வியாழக்கிழமை வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்கள் முன்பு வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தினை தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக இயற்றிட வலியுறுத்தி நவம்பா் 21, 22-ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் அனைவரும் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக் குழு தீா்மானித்து அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஏரித்தெருவைச் சோ்ந்த வழக்குரைஞா் கண்ணன் (30), புதன்கிழமை ஒசூா் தாலுகா அலுவலக சாலையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கம் போல பணிக்குச் சென்று திரும்பி வந்தாா். அவரை பின்தொடா்ந்து வந்த ஒசூா், நாமல்பேட்டை பகுதியைச் சோ்ந்த குமாஸ்தா ஆனந்தகுமாா் (39) என்பவா், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கண்ணனை வெட்டினாா்.

இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த கண்ணனை பிற வழக்குரைஞா்கள் ஆட்டோவில் ஏற்றி தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கண்ணனை வெட்டிய ஆனந்தகுமாா் வீச்சரிவாளுடன் ஒசூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

இந்தச் சம்பவத்தை அறிந்த வழக்குரைஞா்கள் நீதிமன்றம் முன்பு குவிந்து, வழக்குரைஞா் சண்முகம் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆனந்தகுமாா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இந்த நிலையில், வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தினை தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக இயற்றிட வலியுறுத்தி நவம்பா் 21, 22 ஆகிய இரண்டு நாள்களும் தமிழகம் ம் மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் அனைவரும் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க |நீதிமன்றங்களில் கூடுதல் பாதுகாப்பு!

திருத்தணி சார்பு நீதிமன்றம் முன்பு காவல் ஆய்வாளர் ஞா.மதியரசன் தலைமையில் நீதிமன்றத்திற்கு வரும் நபர்களை தீவிர சோதனைகளுக்கு பிறகு அனுமதித்த போலீசார்.

திருத்தணி

வழக்குரைஞா்கள் தொடர்ந்து தாக்கப்படுவது மற்றும் கொலை செய்யப்படுவதை கண்டித்தும், வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சார்பு நீதிமன்றம் முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கரூர். நா. மாரப்பன் தலைமையில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதேபோல, வழக்குரைஞா்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், வழக்குரைஞா்கள் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்த வேண்டியும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வியாழக்கிழமை( நவம்பா் 21) வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

இதேபோன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்கள் முன்பு வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோதனை

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சார்பு நீதிமன்றம் முன்பு காவல் ஆய்வாளர் ஞா.மதியரசன் தலைமையில் போலீசார் நீதிமன்றத்திற்கு வரும் நபர்களை தீவிர சோதனைகளுக்கு பிறகு அனுமதித்தனர். இதேபோன்று தமிழகம் முழுவதும் நீதிமன்றத்திற்கு வரும் நபர்களை போலீசார் தீவிர சோதனைகளுக்கு பிறகு அனுமதித்து வருகின்றனர்.

புதிய உயர்மட்ட பாலம் சேதமடைந்தது ஏன்? - தமிழக அரசு அறிக்கை!

திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் இணைக்கும் உயர்மட்ட பாலம் சேதம் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.செங்கம் அருகே, அகரம்பள்ளிப்பட்டு- தொண்டமானூர் இடையில் தென்பெண்ணை ஆற்றின... மேலும் பார்க்க

கனமழை எதிரொளி: எங்கெல்லாம் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

ஃபென்ஜால் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால், வெள்ள நீர் வடியாத பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச. 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிக... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்ற... மேலும் பார்க்க

நிவாரணம் கொடுப்பதுதான் தீர்வா? - விஜய் கேள்வி

தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தீர்வா என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:புயல்... மேலும் பார்க்க

வானிலை தரவுகளை மீறி புயல் பாதிப்பு: அமைச்சர் சேகர்பாபு

வானிலை தரவுகளை மீறி பென்ஜால் புயலின் பாதிப்பு இருந்ததாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் அப்போது தெரிவித்ததாவது:வானி... மேலும் பார்க்க

மனிதர்களை ஆவியாக்கும் ஆயுதங்களை பயன்படுத்துகிறதா இஸ்ரேல்? பகீர் குற்றச்சாட்டு!

காஸா: மனித உடல்களை ஆவியாக்கும் ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவம் காஸா மக்களின் மீது பயன்படுத்துவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.இதுகுறித்து காஸாவின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்... மேலும் பார்க்க