செய்திகள் :

Kanguva: `அருந்ததி' முதல் `கங்குவா' வரை... `பீரியட்’, `ப்ரசன்ட்' கனெக்ட் கொண்ட படங்களின் லிஸ்ட்

post image
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று பிரமாண்டமாக வெளியாகிறது `கங்குவா'.

கங்குவாவாகவும் ஃபிரான்சிஸாகவும் படத்தில் களமிறங்குகிறார் சூர்யா. அதாவது `பீரியட்' காட்சிகளில் கங்குவாவாகவும் `ப்ரசன்ட்' காட்சிகளில் ஃபிரான்சிஸாகவும் வருகிறார் சூர்யா. இதுபோன்ற பீரியட் மற்றும் ப்ரசன்ட் காட்சிகளை ஒன்றாகக் கொண்ட திரைப்படங்கள் பலவற்றை இந்திய சினிமாவில் வெளிவந்திருக்கின்றன. அந்த பட்டியலிலிருக்கும் பெரும்பான்மையான திரைப்படங்கள் `Reincarnation' என சொல்லப்படும் மறுபிறவியை மையப்படுத்திதான் நகர்ந்திருக்கிறது.

Kanguva |கங்குவா

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு நபர் முடிக்காமல் விட்ட வேலைகளை இந்த ப்ரசன்ட் காலகட்டத்தில் மறுபிறவியாக வந்து அந்த நபர் முடிப்பதாகவும், முன்பிறவியின் பகையை ப்ரசன்ட் காலத்தின் நபர் தீர்த்துக் கட்டுவதாகவும்தான் இதுபோன்ற ஃபேண்டஸி திரைப்படங்களின் கதைகளங்களாக இருக்கும். `பீரியட்', `ப்ரசன்ட்' என இரண்டும் இடம்பெறும் திரைப்படங்கள் பலதும் இந்த ஒன்லைன் வைத்தே பின்னப்பட்டிருக்கிறது. தங்களது ஆதர்ச நாயகன்களை இதுபோன்ற இரட்டை வேடங்களில் பார்ப்பது எப்போதும் ரசிகர்களுக்கு ஒரு கூஸ்பம்ஸ்தான்!

அப்படி `பீரியட்', `ப்ரசன்ட்' என்கிற ஃபார்முலாவை ஒரே படத்தில் காட்சிப்படுத்திய திரைப்படங்களை இங்கு பார்க்கலாம்.

வீரமங்கையாக இருக்கும் அருந்ததிக்கு (அனுஷ்கா) பசுபதியால் (சோனு சூட்) சில பிரச்னைகள் நிகழும். ஒழித்துக்கட்ட முடியாத அந்த பிரச்னைகளுக்கு ஒரு வழிகட்ட பசுபதி உயிருடன் இருக்கும்போதே அவருக்கு சமாதி கட்டிவிடுவார். அதன் பிறகு பசுபதியின் ஆவி பழிவாங்க துடிப்பதை பார்த்து அதனை கட்டுப்படுத்த தனது உயிரைக் துறந்துவிடுவார். அருந்ததி கொடுத்துவிட்டு போன விஷயத்தை வைத்து அவரின் மறுபிறவியான ஜக்கம்மா எப்படி பசுபதியை ஒழித்துக் கட்டுகிறார் என்பதுதான் இந்த திகில் படத்தின் ஒன்லைன்.

Arundati

2கே கிட்ஸ் வரை மிகவும் ஃபேவரைட்டான இந்த ஹாரர் திரைப்படம் `பீரியட்', `ப்ரசன்ட்' பார்முலாவை பின்பற்றியதுதான். இந்த டெம்ப்ளேட்டை மையப்படுத்திய `ஃபீமேல் சென்ட்ரிக்' திரைப்படங்களில் இதுவும் ஒன்று!

நிகழ்காலத்தில் ஹர்சா ( ராம்சரண்) துறு துறு இளைஞன். அதுவே கடந்த காலத்தில் கால பைரவா வீர தீர சூரன்! கடந்த காலத்தில் வில்லனின் சூழ்ச்சியால் கால பைரவனின் மனைவி யுவராணி இறந்துவிடுகிறார். மறு ஜென்மத்தில் அதே பெண் ஹர்சாவின் காதலியாகவும், அதே எதிரி வில்லனாகவும் வருகிறார். முன் ஜென்மத்தின் பகையை தீர்த்துக் கொள்வதுதான் இந்தப் பிரமாண்ட டோலிவுட் படத்தின் கதை.

Magadheera

ராஜமெளலி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் இந்த டெம்ப்ளேட்டை பின்பற்றிய முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. இதன் சாரம்சத்தை பின்பற்றியே அடுத்தடுத்த பல திரைப்படங்கள் டோலிவுட்டில் வெளியாகின.

தற்காப்பு கலையில் வல்லவராக இருக்கும் போதிதர்மன் நோய் பரவலை தடுக்க சீனாவுக்கு செல்கிறார். நோயை சரி செய்த பிறகு சில சூழ்ச்சிகளால் அவர் இறந்தும்விடுகிறார். அதன் பிறகு பயோ-வாரை (Bio War) இந்தியாவின் மீது தொடுக்கிறார் சீனாவை சேர்ந்த டாங் லீ. போதிதர்மன் காலத்தில் இருந்த அதே நோயை இந்த காலத்தில் நாயின் மூலமாக பரப்பும் இவரிடம் சில வித்தைகளும் இருக்கும். ஆனால், அந்த வித்தைகளெல்லாம் போதிதர்மன் வம்சத்தை சேர்ந்த அரவிந்திடம் செல்லுபடியாகாது.

7 ஆம் அறிவு

இதற்கு காரணம் இந்த அரவிந்தனின் மரபணு போதிதர்மனுடைய மரபணுவுடன் ஒன்றி இருப்பதுதான் என்பதை கண்டுபிடித்து அரவிந்துடன் மோதலை தொடங்குகிறார் டாங் லீ. போர் திட்டங்களையெல்லாம் அரவிந்த் தடுப்பதுதான் இந்தப் படத்தின் கதை. இந்தப் படம் அந்த `பீரியட்', `ப்ரசன்ட்' பார்முலாவை பின்பற்றியதுதான். ஆனால், பீரியட் காட்சிகள் படத்தில் மிகவும் குறைவாகதான் இருக்கும். இருப்பினும் அந்த காட்சிகளின் தாக்கம் படத்தின் க்ளைமேக்ஸ் வரை தாங்கி நிற்கும்.

இயக்குநராக வேண்டும் என துடிப்புடன் இருக்கும் வாசு என்கிற இளைஞருக்கு ஒரு மோதலால் காயம் ஏற்படுகிறது. அந்த காயத்தினால் அவ்வபோது வாசுவுக்கு சில உளவியல் பிரச்னையும் ஏற்படுகிறது. அதன் பிறகு கதையை எழுதி முடித்து ஒரு வெற்றி திரைப்படத்தைக் கொடுத்தும்விடுகிறார் வாசு. திரைப்படம் வெளியாகிய கொஞ்ச நாட்களிலேயே பதிப்புரிமை பிரச்னைகளால் கைது செய்யப்படுகிறார். அதே கதையை ஷ்யாம் சிங்கா ராய் முன்பு எழுதியிருக்கிறார்.

Shyam Singha Roy

அதே புத்தகத்தை நகல் எடுத்து திரைப்படத்தை எடுத்து வைத்திருக்கிறார் என்ற குற்றசாட்டு இவர் மீது எழுகிறது. அதன் பிறகு ஷ்யாம் சிங்கா ராய்-க்கும் வாசுவுக்கும் என்ன தொடர்பு என்பதை அலசுவதுதான் இந்த டோலிவுட் படத்தின் கதை. நானி, சாய் பல்லவி நடிப்பில் வெளியான இந்தப் படமும் இந்த `பீரியட்', `ப்ரசன்ட்' களத்தை மையப்படுத்தியதுதான்.

தனது காதலியுடன் சேரத்துடிக்கும் தனுஷ் நான்கு ஜென்மங்களாக போராடி எப்படியோ நான்காவது ஜென்மத்தில் தனது காதலியோடு சேர்வதுதான் இந்தப் படத்தின் கதை. மறுஜென்மம் என்கிற கான்செப்ட்டைக் கொண்ட திரைப்படங்களெல்லாம் ஒரேயொரு மறுபிறவியை மட்டும்தான் சார்ந்திருக்கும். ஆனால், இந்த படத்தில் மொத்தமாக நான்கு ஜென்மங்களை ஒரே வகையான கதாபாத்திரங்களை வைத்தே நகர்த்தியிருப்பார் இயக்குநர் கே.வி. ஆனந்த்.

Anegan

இந்தப் படத்தில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால்...தனுஷின் முதல் ஜென்மத்தில் இருக்கும் அதே கதாபாத்திரங்கள் நான்காவது ஜென்மம் வரை தொடரும். முதன்மை பாத்திரங்களை தவிர பிற கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு ஜென்மத்தில் ஒவ்வொரு மாதிரியான குணாதிசியங்கள் இருக்கும்.

இந்த களத்தை பயன்படுத்தி, ஹாரராகவும் , ஆக்‌ஷனாகவும் பல திரைப்படங்கள் கதை சொல்லியிருக்கிறது. பெரும்பாலான ஹாரார் கதைகள் ஒரு பழங்கதைகளை சொல்லி அதன் மூலம் பிரசன்டில் வரும் சிக்கலுக்கு தீர்வு சொல்வபையாக இருந்திருக்கிறது. ஆனால் அதில் எல்லாம் பீரியட் கதைகள் சிறிய அளவில் காட்சி படுத்தப்பட்டிருக்கும். சந்திரமுகி மாதிரியான சில படங்களில் பீரியட் காட்சிகள் குறைவாக இருந்தாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்திருக்கிறது.

`கங்குவா' இந்த டெம்ப்ளேட்டிலிருந்து எப்படி வேறுபட்டிருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த கான்சப்ட்டை மையப்படுத்திய முக்கியமான திரைப்படங்கள் இவைதான். இதை தாண்டி உங்களுக்கு தெரிந்த இந்த `பீரியட்', `ப்ரசன்ட்' கனெட்க் டெம்ப்ளேட்டைக் கொண்ட படங்களை கமென்ட்டில் பதிவிடுங்கள்.!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

Inbox 2.0 Ep 9: Kanguva படம் பார்த்தவங்க இந்த வீடியோவையும் பாருங்க! | Cinema Vikatan

இன்பாக்ஸ் 2.0 எபிசோட் 9 இப்போது வெளிவந்துள்ளது.முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும். மேலும் பார்க்க

AR Rahman: `நண்பர்களே, முக்கியமான ஒன்றைப் பேச விரும்புகிறேன்' - ஏ.ஆர். ரஹ்மானின் பதிவு

இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர். ரஹ்மான், உலக நீரிழிவு தினத்தையொட்டி (நவம்பர் 14) விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்திருக்கிறார்.அந்தப் பதிவில், ``நண்... மேலும் பார்க்க

கங்குவா விமர்சனம்: சத்தியத்தைக் காக்கப் போராடும் சூர்யா; ஆனால் இந்தத் திரைக்கதையை யார் காப்பது?

இரண்டு காலவரிசையில் நடக்கும் கதையில் 2024-ம் ஆண்டில் குற்றவாளிகளை ரகசியமாகப் போலீசுக்குக் கண்டுபிடித்துத் தரும் 'பவுன்ட்டி ஹண்டராக' இருக்கிறார் பிரான்சிஸ் தியோடர் (சூர்யா). அதே நேரத்தில் இந்திய எல்லைப... மேலும் பார்க்க

Bloody Beggar: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை திருப்பிக் கொடுத்தாரா நெல்சன்? - உண்மையில் நடந்தது என்ன?

இயக்குநர் நெல்சன் தயாரிப்பில், கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பிளடி பெக்கர்' (Bloody Beggar). தீபாவளி வெளியீடாக வந்த இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு, அதனால் 7 கோடி ரூபாய் வரை நஷ்டம் ... மேலும் பார்க்க