செய்திகள் :

நெல்லை: சேரும் சகதியுமான சாலைகள்; நடந்து செல்வதே சாகசம்தான்... அவதியில் ராதாபுரம் மக்கள்..!

post image

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவுக்கு உள்பட்ட ப்ரைட் நகர் பகுதியில் சுமார் 120 வீடுகள் வரை இருக்கின்றன. இந்தக் குடியிருப்பு பகுதியில் உள்ள பாதைகள் அனைத்தும், முறையாகச் சாலைகள் அமைத்துத் தரப்படாமல், மண் சாலைகளாக, குண்டும் குழியுமான நிலையில் காணப்படுகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என அனைவரும் தங்கள் அன்றாட தேவைகளுக்கு இந்த சாலையை கடந்துதான் பிரதான சாலையை அடைய வேண்டிய நிலை உள்ளது.

நெல்லை - ராதாபுரம் ப்ரைட் நகர்

இவ்வாறிருக்க, கடந்த ஒரு வாரமாக ராதாபுரம் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, ப்ரைட் நகர் பகுதியில் இருக்கும் பாதைகள் சேறும் சகதியுமாக நடந்து செல்வதே சிரமமாக மாறியிருக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்த பிறகு குழிகளில் மண் கொட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இது தற்காலிக தீர்வுதான் என்றும், முறையாக புதிய சாலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதுதான் இதற்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நெல்லை - ராதாபுரம் ப்ரைட் நகர்

இது குறித்து பிரைட் நகர் மக்களிடம் பேசியபோது, "மழைக் காலங்களில் நடந்து போக முடியாத அளவுக்குத் தெருக்கள் சேதமடைகிறது. எங்களின் தேவைகளுக்காக ஒரு நாளைக்குப் பத்து முதல் பதினைந்து தடவைக்கும் மேல் இந்தச் சாலையில் பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள், வாரம் ஒருவர் தடுமாறி கீழே விழும் நிலை உருவாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இந்தப் பிரச்னையை கவனத்தில் கொண்டு, உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்." என்று கோரிக்கை வைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

குமரி: திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே கட்டப்பட்டு வரும் கண்ணாடிப் பாலம்! | Album

திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம்திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம்திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் மேலும் பார்க்க

``பணத்தை கேட்டால் பிணம்தான்... மிரட்டும் அமைச்சரின் உதவியாளர்'' - எஸ்.பி-யிடம் புகார் அளித்த பெண்

மயிலாடுதுறை சின்ன கண்ணாரத் தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளரான வேதா ஸ்ரீநிவாஸ் என்பவர்மீது ராணிப்பேட்டை எஸ்.பி-யிடம் புகார் மனு ஒன்றைக் க... மேலும் பார்க்க

“அரசு மருத்துவமனைகளில் டேக் கட்டும் நடைமுறை செயல்பாட்டுக்கு வரும்! ” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராகப் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்பட... மேலும் பார்க்க

கிண்டி: "நலமுடன் இருக்கிறேன்; முதல்வரிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான்..." - மருத்துவர் பாலாஜி

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பாலாஜியை, விக்னேஸ்வரன் என்பவர் நேற்று (நவம்பர் 13) காலை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இ... மேலும் பார்க்க

தவறான பிரமாணப் பத்திரம்... அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது தேர்தல் குற்ற வழக்கு!

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திட்டமிட்டு தவறான பிரமாணப் பத்திரம் தாக்கல... மேலும் பார்க்க

TASMAC : 2 மாவட்டங்களில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை!

டாஸ்மாக்கில் விற்கப்படும் ஒவ்வொரு பொருட்களும் முறையாக கணினி மூலம் பில்லிங் செய்யப்பட்டு, அதன் ஒவ்வொரு தரவுகளையும் கணினி மூலம் கணக்கில் கொண்டு வரவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் நீண்ட கால கோரிக்கை.மது... மேலும் பார்க்க