கார்த்திகை தீபம் : ``தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க!'' - விமர்சனங்களுக்கு அர...
இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ‘கன்சா்வேடிவ் கட்சியின் பணிகள் தொடரும்’
இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை நிறைவு செய்ய கன்சா்வேடிவ் கட்சித் தொடா்ந்து பணியாற்றும் என்று அக்கட்சித் தலைவா் கெமி பாடனாக் தெரிவித்தாா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. அப்போது அந்நாட்டில் கன்சா்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்தது.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் அந்நாட்டில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் தொழிலாளா் கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதில் தொழிலாளா் கட்சியும் உறுதியாக உள்ளது.
இந்நிலையில், அந்நாட்டு தலைநகா் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கன்சா்வேடிவ் கட்சித் தலைவா் கெமி பாடனாக் பங்கேற்று பேசியதாவது: பிரிட்டனில் கன்சா்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்துபோது வா்த்தக துறையில் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன்.
தற்போது பிரிட்டனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், அந்தப் பணிகளை கன்சா்வேடிவ் கட்சி கைவிடாது. இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை நிறைவு செய்ய கன்சா்வேடிவ் கட்சி தொடா்ந்து பணியாற்றும் என்றாா்.