எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
17,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போகும் போயிங்?
போயிங் கோ நிறுவனமானது, தனது நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது. மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆள்குறைப்பு நடவடிக்கையின் முதல் தொடக்க நிலைப் பணிகளை நிறுவனம் புதன்கிழமை தொடங்கிவிட்டதாகவும், பணியிலிருந்து நீக்கப்படவிருக்கும் ஊழியர்களுக்கு பிங்க் சிலிப் எனப்படும் நோட்டீஸ் வழங்குவது தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒருபக்கம், திறமையான ஊழியர்களுக்கு வாய்ப்பு அளிப்பது மற்றும் திறமையான பணியாளர்களை அதிகப்படுத்துவது ஆகிய நடவடிக்கையின் காரணமாக, ஆள்குறைப்பு நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதமே, போயிங் நிறுவனம் 10 சதவீத ஆள்குறைப்பில் ஈடுபடவிருப்பதாக அறிவித்திருந்தது. இது கிட்டத்தட்ட 17,000 ஊழியர்கள் என்கிறது தரவுகள்.
கடந்த ஜனவரியில் போயிங் விமானம் சந்தித்த விபத்துகள், பெரும்பாலான தொழிற்சாலைகளில் தொடர்ந்து 7 வாரங்கள் நடந்த வேலை நிறுத்தம், பொருளாதார சிக்கல் உள்ளிட்ட பல காரணிகளால் நிறுவனம், ஆள்குறைப்புக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதேவேளையில், மிகவும் முக்கியமான பணியிடங்களில் ஆள்களைக் குறைத்துவிட்டால், அதுவே, நிறுவனம் மீண்டும் எழ முடியாமல் போவதற்குக் காரணமாகிவிடலாம் என்பதால், மிகுந்த கவனத்துடன் ஆள்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஒருபக்கம் போயிங் ஆள்குறைப்பில் ஈடுபட்டாலும் தற்போது ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ ஒரிஜின் எல்எல்சி, அமேசான்.காம் இங்க் போன்றவை தங்களது பல்வேறு திட்டப் பணிகளுக்காக ஆள் சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் ஊழியர்களுக்கு கவலையில்லை என்றும் கூறப்படுகிறது.