எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
எக்ஸ் தளத்தில் இருந்து விலகியது தி கார்டியன்
பிரிட்டன் நாளிதழ் நிறுவனமான தி கார்டியன், எக்ஸ் (முந்தைய பெயர் ட்விட்டர்) சமூக வலைதளத்தில் இனி எந்தச் செய்திகளையும் பகிரபோவதில்லை என்று அறிவித்துள்ளது.
எக்ஸ் சமூக வலைதளத்தில் மிகக் கடுமையான வலதுசாரி சதி மற்றும் இனவெறி கருத்துகள் நிறைந்து உள்ளது என்றும் தி கார்டியன் குறிப்பிட்டுள்ளது.
எக்ஸ் தளத்திலருந்து வெளியேறுவதற்கான காரணத்தை விளக்கும் தி கார்டியனின் ஊடகப் பதிவில், "அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில், எக்ஸ் தளத்தின் நச்சுத்தன்மை கொண்ட கருத்துகள் தெளிவாக வெளிப்பட்டுள்ளது; அதன் உரிமையாளர் எலான் மஸ்க், எகஸ் பக்கத்தில் அரசியல் பிரசாரங்களை உருவாக்குவதற்கு தனது செல்வாக்கை பயன்படுத்தியுள்ளார்" என்ற குற்றசாட்டையும் தி கார்டியன் முன்வைத்துள்ளது.
எக்ஸ் சமூக வலைதளத்தில் தி கார்டியனை 10.7 மில்லியன் பயனாளார்கள் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.