3 நாடுகளின் ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி: மத்திய அரசு நடவடிக்கை
சீனா, தென் கொரியா மற்றும் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எபிகிளோரோஹைட்ரின் ரசாயனத்துக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது.
ஒட்டுப்பசை துறையில் எபிகிளோராஹைட்ரின் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனம் சீனா, தென் கொரியா, தாய்லாந்து ஆகிய 3 நாடுகளில் இருந்து வழக்கமான விலையைவிட குறைந்த விலைக்கு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதனால் அந்த ரசாயனத்தை உற்பத்தி செய்யும் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் பாதிக்கப்படாத வகையில், அந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எபிகிளோரோஹைட்ரின் ரசாயனத்துக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது.
அந்த ரசாயனம் மீது ஒரு டன்னுக்கு 557 டாலா்கள் (சுமாா் ரூ.47,000) என்று 5 ஆண்டுகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் துறை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.