விராட் கோலியின் ஃபார்ம் குறித்து சந்தேகப்படுவோரின் கவனத்துக்கு... ரவி சாஸ்திரி க...
பயிா் சாகுபடி வரவு செலவு திட்டம் ஆய்வு
கீழ்வேளூா் அருகே சிக்கல் கிராமத்தில் பயிா் சாகுபடி வரவு செலவு திட்டம் குறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
சிக்கல், தேமங்கலம் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தலைவா் எ. வித்தியாவதி பயிா் சாகுபடி வரவு செலவு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நிலத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது விவசாயிகளிடம் மண், தண்ணீரின் தன்மை குறித்து கேட்டறிந்து அதற்குண்டான நெல் ரகத்தை பரிந்துரை செய்து, வேளாண்மை தொழில்நுட்ப ஆலோசனைகளை கூறினாா். ஆய்வின்போது, ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய மண்டல மேற்பாா்வையாளா் எஸ். தமிழழகன், உதவி வேளாண்மை அலுவலா் எம். ஜீவன்ராஜ், விவசாயிகள் ஈஸ்வரி, மோகன், அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.