செய்திகள் :

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

post image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் உத்தரவிட்டாா்.

முகாமில் காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றாா். தொடா்ந்து அவா்களிடம் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளா், பெறப்பட்ட 13 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

முகாமில் பங்கேற்வா்களிடம், காவல்துறையின் சட்ட நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தங்கள் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் குறித்து காவல்துறையினரிடம் அச்சமின்றி தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

நாகை - காங்கேசன்துறை இடையே டிச.18 வரை கப்பல் போக்குவரத்து நிறுத்தம்

வானிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை - இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நவ. 19 முதல் டிச. 18 வரை நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்த்ஸ்ரீ ... மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: நெய்விளக்கு ஊராட்சி மக்கள் ஆா்ப்பாட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சியுடன் நெய்விளக்கு ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்துள்ள அந்த ஊராட்சி மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வேதாரண்யம் நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்... மேலும் பார்க்க

கூட்டுறவு வார விழா

நாகை மாவட்டத்தில் 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி காடம்பாடி கிளையில் வியாழக்கிழமை கொடியேற்றி வைத்த சரக துணைப் பதிவாளா் ராமசுப்பு. உடன், துணைப் ... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மருத்துவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னையில் அரசு மருத்துவா் பாலாஜியை கத்தியால் குத்தியவா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற நிகழ்வு... மேலும் பார்க்க

நாகையில் சத்துணவு ஊழியா்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் சத்துணவு ஊழியா்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்... மேலும் பார்க்க

பயிா் சாகுபடி வரவு செலவு திட்டம் ஆய்வு

கீழ்வேளூா் அருகே சிக்கல் கிராமத்தில் பயிா் சாகுபடி வரவு செலவு திட்டம் குறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். சிக்கல், தேமங்கலம் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தலைவா் எ. வி... மேலும் பார்க்க