விளையாட்டால் ஒன்றரை கோடி வேலைவாய்ப்பு!
இந்தியாவின் விளையாட்டுச் சந்தை 2030 ஆம் ஆண்டில் 130 பில்லியன் டாலர்களை 14 சதவிகித கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) எட்டும் என்று கூகிள் மற்றும் டெலாய்ட் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவின் விளையாட்டு சந்தையின் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒன்றரை கோடி வேலைவாய்ப்புகளும், 21 பில்லியன் டாலர் மறைமுகமான வரி வருவாயும் கிடைக்கும். இந்த வளர்ச்சியானது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட இரு மடங்கு வேகமாகும்.
2030 ஆம் ஆண்டுக்குள் விளையாட்டு பொருள்கள், ஆடை சந்தை மதிப்பு 58 பில்லியன் டாலராக இரட்டிப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் தளங்களின் எழுச்சி இந்தியாவில் விளையாட்டு நுகர்வு மீது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜென் இசட் தலைமுறையினரின் இடையில்தான், டிஜிட்டல் தளத்தில் மேற்கொள்ளப்படும் விளையாட்டு நுகர்வு மிக அதிகமாக உள்ளது. இந்த தலைமுறையினர்தான் 93 சதவிகிதம் பேர், மற்ற தலைமுறையினரைவிட அதிகமாக டிஜிட்டல் தளங்களை உபயோகிக்கின்றனர்.
இதையும் படிக்க:தில்லியில் மோசமான காற்று மாசு! 25-30 சிகரெட்டுகளை புகைப்பதற்குச் சமம்!