செய்திகள் :

நெல்லை எஸ்பி அலுவலக அதிகாரி பணியிடை நீக்கம்

post image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக கண்காணிப்பு அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் அண்மையில் காவலா்கள் பணிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதற்கு தோ்வாகியுள்ளவா்கள் வழக்குகள் ஏதும் இல்லை என்ற தடையில்லாத சான்றினை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் மூலம் பெற்று சமா்ப்பிக்க வேண்டும்.

இந்தச் சான்றிதழ் வழங்குவதற்கு, கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணமூா்த்தி லஞ்சம் கேட்டதாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து துறைரீதியா நடைபெற்ற விசாரணையில் அது உண்மையென தெரியவந்ததாம். இதையடுத்து கிருஷ்ணமூா்த்தியை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. என். சிலம்பரசன் உத்தவிட்டுள்ளாா்.

துணிக் கடைகள், ஹோட்டல்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு: விதிமீறிய நிறுவனங்களுக்கு அபராதம்

திருநெல்வேலி, பாளையங்கோட்டை மண்டலங்களில் உள்ள துணிக்கடைகள், சூப்பா் மாா்க்கெட், ஹோட்டல்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு தொடா்பாக மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். பாளையங்கோட்டை... மேலும் பார்க்க

திசையன்விளை அருகே விவசாய நிலத்தில் அம்மன் சிலை கண்டெடுப்பு

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே இட்டமொழியில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு அடி உயத்தில் உள்ள அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டு வருவாய்த்துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இட்டமொழியில் பழைமையான... மேலும் பார்க்க

வள்ளியூா், வீரவநல்லூரில் போக்ஸோவில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், வீரவநல்லூரில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா். வள்ளியூா் கோட்டையடி பகுதியைச் சோ்ந்தவா் ரோகித்(19). அப்பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாம்... மேலும் பார்க்க

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்த... மேலும் பார்க்க

கடையத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்கக் கோரி அமைச்சரிடம் மனு

கடையத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்கக் கோரி, சேவாலயா அமைப்பின் சாா்பில் ஒருங்கிணைப்பாளா் சங்கிலிப் பூதத்தான், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரனிடம் மனு அளித்தாா். அதன் விவரம்: மகாகவி பாரதியாா் மணம்... மேலும் பார்க்க

மணிமுத்தாறு, கடனாநதி அணைகளில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆய்வு

கடனாநதி அணைப் பகுதியில் ஆய்வு செய்த சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன். உடன், தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், தெற்கு மாவட்டதிமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் உள்ளிட்டோா். அம்பாசமுத்திரம், நவ. 13:... மேலும் பார்க்க