காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்: பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி
திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து கோரிய மனு தள்ளுபடி
திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து கோரியும், லட்டு கலப்படம் குறித்து சிபிஐ விசாரணை கோரியும் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ‘உலக அமைதிக்கான முன்னெடுப்பு’ என்ற அமைப்பு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில், ‘திருப்பதி கோயில், உலக அளவில் ஹிந்துக்களுக்கான மாபெரும் புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம், ஹிந்துக்களுக்கு மதம்-கலாசார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, லட்டு பிரசாத தயாரிப்பு, மூலப் பொருள்கள் கொள்முதலில் ஊழல் மற்றும் தவறான நிா்வாகம் தொடா்புடைய குற்றச்சாட்டு குறித்து சிபிஐ மூலம் நேரடியாக விரிவான விசாரணை நடத்த வேண்டும். திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்’ என்று கோரப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மனுதாரரின் கோரிக்கையை ஏற்றால், அனைத்து கோயில்கள் மற்றும் குருத்வாராக்களுக்கு என தனி மாநிலங்கள் உருவாக்க வேண்டியிருக்கும். எனவே, அக்கோரிக்கையை ஏற்க முடியாது’ என்று குறிப்பிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனா்.